ODI கிரிக்கெட்டில் 11 ஓவர் வீசிய நியூசிலாந்து பவுலர். காரணம் தெரியுமா?.. 2 இந்திய பிளேயர்களும் வீசி இருக்காங்க

0
1308

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 10 ஓவர்களை தான் வீச முடியும். ஆனால் நேற்று ஒரு பந்துவீச்சாளர் மட்டும் 11 ஓவர்கள் வீசி ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் இலங்கையில் தான் நடைபெற்றது.

மகளிருக்கான  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியும் நியூசிலாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சோபி டிவைன் மற்றும் அமிலாகர் ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசினர்.

- Advertisement -

இதன் மூலம் நியூசிலாந்த அணி 50 ஓவர் முடிவில் 329 ரன்களை குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.  இலங்கை  அணி ஆரம்பம் முதலில் தடுமாறியது. கவிதா என்ற வீராங்கனை மட்டும் 98 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால் இலங்கை அணி 213 ரன்களில் சுருண்டது.

இந்த நிலையில் நியூசிலாந்து பந்து வீசும் போது ஈடன் கார்சன் என்ற சுழற் பபந்துவீச்சாளர்  11 ஓவர்கள் வீசி ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ள ஆக்கினார். அவர் தன்னுடைய முழு ஓவரை வீசி  முடித்து விட்டார். இன்னும் மீண்டும் 44 வது வரை வீச ஈடன் கார்சன் வந்தார். அவர் ஏற்கனவே 10 ஓவர் வீசி முடித்த நிலையில் அதனை நடுவரும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் அவர் 11 வது ஓவரை வீசி 1 ரன் மட்டுமே சென்றது. அவர் ஓவர் வீசி முடித்து விட்ட பிறகு தான் நடுவர்கள் கணக்கில் தவறு செய்து விட்டார்கள் என தெரிந்தது. இதன் மூலம் வரலாற்றில் ஈடன் கார்சன் இடம்பெற்று விட்டார். இது போன்ற சம்பவம் மகளிர் கிரிக்கெட்டில் நான்கு முறை நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

இதில் இரண்டு இந்திய வீராங்கனைகளும் இந்த தவறு செய்திருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு நீட்டுடேவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 ஓவர்களையும், இலங்கையை சேர்ந்த காயத்திரி 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 11 ஓவர்களையும், இந்தியாவில் பூர்ணிமா 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 11 ஓவரும் 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்தை சேர்ந்த முகமது ரபிக் ஹாங்காங் எதிராக பதினொரு ஓவர்களையும் வீசி இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.