ருதுராஜ் இந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலிதான்.. ஆனா அவருக்கு நல்ல கிரிக்கெட் மூளை இருக்கு -மைக் ஹசி கருத்து

0
87
Hussey

நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி, தனது கடைசிப் போட்டியில் ஆர்சிபி அணியை வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் ருதுராஜ் பற்றி சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி பேசி இருக்கிறார்.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில், சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பில் பிரகாசமாக நீடிக்கிறது.

- Advertisement -

இந்த குறிப்பிட்ட போட்டியில் 142 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பொழுது, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கடைசிவரை இருந்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கு ஏற்ற வகையில் மிக மெதுவாக விளையாடி 41 பந்தில் 42 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறவும் வைத்தார்.

தற்பொழுது ருதுராஜ் பற்றி பேசியிருக்கும் மைக்கேல் ஹசி கூறும் பொழுது “ருதுராஜ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் அந்த பொறுப்பில் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் மிகவும் அமைதியாக இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவரது கிரிக்கெட் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், தோனி போன்ற ஒருவரும் பிளமிங் போன்ற ஒருவரும் உடன் இருந்து வழி நடத்துகிறார்கள். இந்த விஷயத்தில் அவர் அதிர்ஷ்டசாலி.

அவர் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டிருக்கிறார் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால் அவர் கேப்டனாக முடிந்த வரையில் மிக அதிகமாகவே செயல்படுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் கேப்டன் பொறுப்பில் இருப்பதை மிகவும் வசதியாக உணரக்கூடியவராக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் சூரியகுமார் விஷயத்தில் பெரிய தவறு செய்து விட்டேன்.. எனக்கு வேறு வழியில்லை – கம்பீர் வருத்தம்

மேலும் கேப்டனாகமட்டுமே வளர்கிறார் என்று நான் நினைக்கிறேன். இத்தோடு அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளையும் இருக்கிறது. நேற்றைய விளையாட்டை எடுத்துக் கொண்டு பார்த்தால், எப்போது வேகத்தை குறைத்து விளையாட வேண்டும், எப்போது வேகத்தை அதிகரித்து விளையாட வேண்டும் என்பதில் அவர் அவ்வளவு தெளிவாக இருந்தார். அவருக்கு நல்ல கிரிக்கெட் தெளிவு இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.