“இனி இந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுத்து என்ன லாபம்?” – நெக்ரா அதிரடியான பேச்சு!

0
1298
Nehra

இந்திய அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இன்று தொடரின் கடைசி போட்டி பெங்களூரில் நடக்கிறது.

இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் கடைசியாக வந்து சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் சகர் வரை வாய்ப்பு பெற்று விளையாடி விட்டார்கள்.

- Advertisement -

ஆனால் இந்த தொடரில் ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெற்று இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சிவம் துபே இருவருக்கும் இதுவரையில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹ்ரா தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் இவர்களுக்கான வாய்ப்பு தரப்படுவது எப்படியானதாக அமையும் என்பது குறித்து கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நீங்கள் இந்த தொடருக்கு சிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரையும் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருக்கிறார்களா? நீங்கள் அவர்களை அப்படி பார்க்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. இன்று அவர்களை விளையாட வைத்தால் அதனால் என்ன லாபம்?

- Advertisement -

நீங்கள் ஒவ்வொரு தொடருக்கும் முன்னால் சிந்திக்க வேண்டும். இந்தத் தொடர் சென்ற விதத்தில் எப்பொழுதும் நிலையான 10 பேர் கொண்ட அணி இருந்து வந்திருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் எடுக்க விரும்புகிறார். ஜிதேஷ் சர்மாவுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

ஆவேஷ் கான் மீண்டும் வந்துள்ளார். முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசுகிறார். நீங்கள் சிறப்பாக செயல்படும் பொழுது குறிப்பிட்ட வீரருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுப்பது தான் சரியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இடதுகை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!