“எங்களால என்ன பண்ண முடியும்னு இன்னைக்கு ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டோம் இனி..!” – ஆட்டநாயகன் கிளன் பிலிப்ஸ் ஸ்பெஷல் பேட்டி!

0
494
Phillips

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்று, நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகள், 8 புள்ளிகள் என புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இன்றைய போட்டியில் டாசை இழந்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சென்னை சேப்பாக்கம் விக்கெட்டில் குவித்தது. வில் யங், டாம் லாதம் மற்றும் கிளன் பிலிப்ஸ் மூவரும் நியூசிலாந்து அணிக்கு அரை சதம் அடித்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 139 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து, 149 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. பந்துவீச்சில் டிரண்ட் போல்ட் இரண்டு விக்கெட், பெர்குஷன் மற்றும் சான்ட்னர் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வென்று இருந்த காரணத்தினால், இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி முதலில் பேட்டிங் செய்திருந்தால், இங்கிலாந்து அணியை அசைத்துப் பார்த்தது போல நியூசிலாந்து அணியையும் ஏதாவது செய்திருக்க வாய்ப்பு இருந்தது.

மேலும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் ஆரம்பத்தில் தந்த நான்கு எளிய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டது. இந்த நால்வருமே இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு அதிக ரன்கள் எடுத்தவர்களாக அமைந்தார்கள். இது ஆப்கானிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டது.

- Advertisement -

இன்று அதிரடியாக 71 ரன்கள் எடுத்த கிளன் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது பேசிய அவர் ” ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர்கள் நம்ப முடியாத அளவுக்கு மிகச்சிறந்த திறமையாளர்கள். நாங்கள் நடுவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் சென்ற விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கடைசி வரை எங்களால் எப்படி எடுக்க முடிந்தது என்பது சிறப்பானது.

இன்று கடைசி பத்து ஓவர்களில் எங்களால் என்ன பெற முடியும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் என்று நினைக்கிறேன். சாப்மேன் மற்றும் சான்ட்னர் இருவரும் எப்படி முடித்தார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.

250 ரன்கள் போதும் என்று நினைத்தோம். ஒருவருக்கு ஒருவர் வேலை செய்து, கற்பிக்கும் விதமாக சூழலில் இருக்கிறோம். இறுதி வரை லாதம் மிகச்சிறப்பாக இருந்தார்!” என்று கூறியிருக்கிறார்!