“இப்பவாவது புரிஞ்சுதே அஸ்வினுடைய அருமை!..” – கேப்டன் மற்றும் பயிற்சியாளரை மறைமுகமாக குத்தி காட்டிய இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்!

0
274

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது . இதன் முதல் டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள டோமினிக்கா தீவில் நேற்று தொடங்கியது .

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 60 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இது டெஸ்ட் போட்டிகளில் 33 வது முறையாக ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருக்கிறார் .

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் அஸ்வின். இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைவான போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா இந்திய அணியின் சுழற்பந்து ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினை வெகுவாக பாராட்டி இருக்கிறார் . இதுகுறித்து ஜியோ சினிமாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் “நேற்றைய போட்டியில் அஸ்வின் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்,

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய ஓஜா” அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்கு சதங்களை எடுத்து இருக்கிறார். தனது துவக்க போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் இருக்கு எதிராக அறிமுகமான அவர் அதிகமான விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நேற்றைய போட்டியில் பந்து வீச்சின் மூலம் அஸ்வின் எழுப்பிய கேள்விகளுக்கு மேற்கிந்திய தீவு வீரர்களிடம் பதில் இல்லை” என்று தெரிவித்தார்.

- Advertisement -

இது தொடர்பாக விரிவாக பேசிய அவர்” சாம்பியன் வீரர்கள் எப்போதும் தங்களுக்கு முன் இருக்கும் தடைகளை தாண்டி வந்து தங்களை நிரூபிப்பார்கள் . அதையே தான் அஸ்வினும் செய்திருக்கிறார். அணிக்கு தேவையான நேரத்தில் தனது பங்களிப்பை அளித்து மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்து இருக்கிறார் அஸ்வின் . அவர் இந்திய அணிக்கு எப்போதும் ஒரு ஸ்பெஷலான வீரர் . தனது பந்துவீச்சின் மூலம் அதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அப்போது தனது ஓய்வை பற்றி யோசிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். புழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த முடிவை பற்றி யோசித்து இருப்பதாகவும் கூறினார். இப்போது அவற்றில் இருந்து மீண்டு வந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்..