“இனி இந்தியாவுக்கு இவர்தான் தோனி.. நீங்க நம்பி வாய்ப்பு குடுங்க !” – முன்னாள் வீரர் பேச்சு!

0
1325
ICT

ஒரு காலக்கட்டத்தில் உலக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் என்பவர்கள், சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் முழுக்க முழுக்க விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்தால் மட்டும் போதும். விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இல்லை என்றால் பேட்டிங் நன்றாக செய்தாலும் அணியில் இடம் கிடைக்காது.

ஒரு விக்கெட் கீப்பர் இரண்டு துறைகளையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயத்தை ஆடம் கில்கிறிஸ்ட் உலக கிரிக்கெட்டில் உருவாக்கினார். அவரது வருகைக்குப் பின்னே விக்கெட் கீப்பர்கள் பேட்ஸ்மேன்களாக அவதரித்தார்கள்.

- Advertisement -

அவருக்குப் பின் உலகக் கிரிக்கெட்டில் இலங்கைக்கு சங்கக்கரா கிடைத்து மிகப்பெரிய பேட்ஸ்மேனாக உருவானார். இந்திய அணிக்கு அப்படி ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கனவாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக மட்டுமில்லாமல், மிகச் சிறந்த கேப்டனாகவும் இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி கிடைத்தார். உடன் அவர் பேட்டிங்கில் கடினமான ஃபினிஷிங் பொறுப்பையும் ஏற்று இருந்தார். அவரது களமுடிவுகள் துல்லியமாக இருக்கும். இதன் காரணத்தால் அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகக் கடினமாக இருந்து வருகிறது.

தற்போது மகேந்திர சிங் தோனியின் இடத்திற்கு மிக நெருக்கமாக விக்கெட் கீப்பிங் நன்றாக பயிற்சி செய்து, வழக்கமான பேட்ஸ்மேன் கேஎல்.ராகுல் கிடைத்திருக்கிறார். அவர் விக்கெட் கீப்பங்கை மேம்படுத்தியதோடு, மனநிலையையும் உயர்வாக மாற்றி இருக்கிறார். இதன் காரணமாக அவரது பேட்டிங் சிறப்பாக மாறி இருக்கிறது. மேலும் களத்தில் கேப்டனாகவும் நல்ல முடிவுகள் எடுக்கிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கேப்டனாக கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “இந்தச் சமயத்தில் கே.எல்.ராகுலையும் நிதானமாகவும் நல்ல நம்பிக்கையான மனநிலையிலும் காணப்படுகிறார். எதிர்பார்த்தது போலவே கேப்டனாகவும் நல்ல முறையில் செயல்பட்டார்.

தற்பொழுது அவர் கேப்டன் பொறுப்புக்கு தகுதியான ஒருவராக தெரிகிறார். ஐபிஎல் தொடரிலும் தற்போது ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் தொடரிலும் கூட அவர் விக்கெட் கீப்பராக நல்ல முறையில் செயல்படுவார் என்று நம்ப வேண்டும். மேலும் அவருடைய டிஆர்எஸ் முடிவுகள், தோனியை போலவே சிறப்பாக இருக்கிறது. அவரது உள்ளுணர்வு தோனியை ஒத்ததாகவும் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!