“இப்ப கஞ்சத்தனமான ஒரு இந்திய பவுலர் இவர்தான்.. 2 வருஷம் வேற மாதிரி இருக்கு!” – இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி!

0
1213
ICT

நேற்று முன்தினம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று முடிவுக்கு வந்தது. புள்ளிப்பட்டியலில் இந்தியா தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதியில் மோதிக் கொள்கின்றன. நாளை முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மும்பையில் மோதுகின்றன. அதற்கு அடுத்த நாள் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஞாயிறு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி மும்பை சென்று முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் பயிற்சி ஊழியர்கள் மும்பை ஆடுகளத்தை ஆய்வு செய்தார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சை முழுமையாக நம்புகிறது. இதன் காரணமாக ஏழாமிடம் வரையிலேயே பேட்டிங் இருக்கும். மேலும் முழுமையான ஐந்து பந்துவீச்சாளர்களை களம் இறக்க இந்திய அணி நிர்வாகம் யோசிக்காது. கடந்த ஐந்து போட்டியில் களம் இறங்கிய இந்திய அணியே அரையிறுதியிலும் களம் இறங்கும்.

எந்த மாதிரியான ஆடுகளங்களிலும் வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய பந்துவீச்சாளர்களை கொண்டு இருக்கின்ற காரணத்தினால், ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருப்பது இந்திய அணியை பெரிதாக பாதிக்காது என்று கருதப்படுகிறது.

- Advertisement -

இந்திய பவுலிங் யூனிட் குறித்து பேசி உள்ள பந்துவீச்சு பயிற்சியாளர் கூறும் பொழுது “பும்ரா மிகவும் வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் கொண்டவர். காயத்திற்கு பிறகு அவர் முழுமையாக தன்னுடைய திறமைகளை தொகுத்து, தனித்துவமான செயல்பாட்டின் மூலம் மிகச் சிறப்பாக இருக்கிறார். அவர் தற்போது பந்தை உள்ளே வெளியே என்று இரு பக்கமும் எடுக்கிறார். இதன் காரணமாக அவர்தான் இந்திய அணியில் இருந்து எதிரணிக்கு மிகவும் ஆபத்தானவர்.

சமி பந்தை தரையில் அடிக்கும் பொழுது தையல் மிக நேராக இருக்கும். அப்படி அவர் செய்யும்பொழுது பந்து எப்படி வரப்போகிறது என்று யாருக்குமே தெரியாது.

கடந்த இரண்டு வருடங்களில் சிராஜ் மிக நன்றாக பந்துவீச்சில் வளர்ந்திருக்கிறார். அவர் தனது பந்துவீச்சை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார். அவர் வாபுல் ஸீம் போன்ற திறன்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.

ஜடேஜாவின் திறமை என்பது மிகவும் எளிமையானது. அவர் பந்தை ஆடுகளத்தில் அடித்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொடர்ச்சியாக வீசிக் கொண்டே இருப்பார். அவருடைய பந்துவீச்சு துல்லியம் அபாரமானது. பேட்ஸ்மேன்களுக்கு ரன்னே கொடுக்காமல் மிகவும் கஞ்சத்தனமாக இருந்து வருகிறார்!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!