இனி இவர்கள்தான் துவக்க வீரர்களாக ஆட வேண்டும்!- கௌதம் கம்பீர் புதிய வியூகம்!

0
1121

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி தொடரானது இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்தியா 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது .

இந்தப் போட்டி தொடர்களுக்கான அணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய தேர்வு குழுவினர் அறிவித்தனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து அக்சர் பட்டேல் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் தங்களது சொந்த காரணங்களுக்காக விலகி இருக்கின்றனர் .

- Advertisement -

தற்போது ரஞ்சி ராபியில் அதிரடியாக ஆடி வரும் மும்பை அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார் . இவர் நடந்து முடிந்த ரஞ்சி போட்டியில் அசாம் அணிக்கு எதிராக 379 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாகவே இவரை டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சகர்களும் கோரிக்கை வைத்தனர். இந்திய அணிக்காக 2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் ப்ரித்வி ஷா . தனது துவக்க போட்டியிலேயே சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர் அந்தப் போட்டி தொடரில் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார் . அதன் பிறகு இவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை .

இந்நிலையில் இவர் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் இந்திய அணி சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான துவக்க வீரர்களாக பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார் . சுப்மன் கில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்

- Advertisement -

இது பற்றி மேலும் தொடர்ந்து பேசிய அவர் தற்போது பிரித்விஷா அணியில் இருப்பதால் இஷான் கிசான் உடன் அவர் துவக்க வீரராக களம் இறங்கலாம். இவர்கள் இருவரும் முறையே வலது கை மற்றும் இடது கை ஆட்டக்காரர்கள் . அதனால் இது ஒரு நல்ல அதிரடியான துவக்க ஜோடியாக இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் அமையும் என்று கூறி இருக்கிறார் கம்பீர் .

தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தற்போது வரை 119 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.கில் 52 ரன்களுடனும் விராட் கோலி 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்