“இனி இதுக்கு சாய் சுதர்சன்தானு பேசனும்.. அப்ப இத செய்யனும்!” – கவாஸ்கரின் பாராட்டும் அறிவுரையும்!

0
2546
Sai

நேற்று ஐபிஎல் மினி ஏலம் ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து, இன்னொரு பக்கம் இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது டி20 போட்டியை அப்படியே மறைத்து விட்டது. நாளைய கிரிக்கெட் உலகத்தில் ஐபிஎல் தொடர் எப்படி ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கான உதாரணம்தான் இது!

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் மற்றும் கேஎல்.ராகுல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது பின்னடைவாக அமைந்துவிட்டது. இதன் காரணமாகவே இந்திய அணி தோல்வி அடைந்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் முதலில் மிகவும் கடுமையாக இருந்தது. ஆனால் தனது இரண்டாவது போட்டியில் விளையாடும் சாய் சுதர்சன் மிகவும் அபாரமாக விளையாடியதோடு அரை சதமும் கடந்து அசத்தினார். அவருக்கு இது அறிமுக போட்டியுடன் தொடர்ந்து இரண்டாவது அரைசதம் ஆகும்.

சாய் சுதர்சன் 60 ரன்கள் தாண்டியதும், மேலும் 30 ஓவர்கள் பக்கம் வந்ததாலும், ரன் சேர்த்துவதற்காக அதிரடிக்கு மாற விரும்பினார். இதன் காரணமாக கட் ஷாட் அடிப்பதற்கு ஏதுவாக இல்லாத ஒரு பந்தை அடிக்க சென்று ஆட்டம் இழந்தார். அவர் விளையாடிய விதத்துக்கு சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரன் தேவைக்காக சுயநலமில்லாமல் ஆட சென்று விக்கெட்டை இழந்தார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆமாம் சாய் சுதர்சன் மிகவும் அழகாக பேட்டிங் செய்கிறார். தனது உடலுக்கு அருகில் பந்தை வைத்து மிகவும் கச்சிதமாக விளையாடுகிறார். அவருடைய தலையும் எங்கும் சாயாமல் உறுதியாக இருக்கிறது. இதனால் விளையாடும் பொழுது அவருக்கு நல்ல சமநிலை கிடைக்கிறது.

- Advertisement -

பொதுவாக இடதுகை பேட்ஸ்மேன்கள் டிரைவ் அடிக்கும் பொழுது அது அழகாக இருக்கும். மேலும் அவர்கள் புல் ஷாட் சிறப்பாக விளையாடுவார்கள். சாய் சுதர்சனும் இதை அழகாக செய்கிறார். அதே சமயத்தில் அவரது மன உறுதியும் திறமையும் மிக மிக சிறப்பாக இருக்கிறது.

இப்போது அவர் அரை சதத்தை சதமாக மாற்ற முடியாததால் திருப்தி அடையாமல் இருப்பார் என்று நான் நம்புகிறேன். அப்படித்தான் அவர் இருக்க வேண்டும். ஒரு துவக்க ஆட்டக்காரருக்கு களம் இறங்கும் பொழுது ஒவ்வொரு முறையும் சதம் அடிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சமமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால்தான் சாய் சுதர்சன் உடன் யார் துவக்க வீரராக வருவார் என்று மக்கள் பேசுவார்கள். அந்த நிலையை உருவாக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!