கிரிக்கெட்டின் நெக்ஸ்ட் சூப்பர்-ஸ்டார் ஷுப்மன் கில் இல்லையாம்; வேறொரு வீரரை தேர்வு செய்த ஸ்டீவ் ஸ்மித்!

0
5920

கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வரக்கூடிய வீரர் சுப்மன் கில்லா? அல்லது ஹரி ப்ரூக்ஸா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

23 வயதான ஷுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதங்கள் மற்றும் இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவர் அத்துடன் நிற்கவில்லை. டி20 போட்டியிலும் சமீபத்தில் சதம் விலாசி மிகப்பெரிய சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றாலும் அதற்கு முன்னர் நடந்த டெஸ்ட் தொடர்களில் இடம் பெற்று சிறப்பாகவே விளையாடினார்.

இந்திய அணிக்காக மூன்றுவித போட்டிகளிலும் விளையாடி வரும் இவர் இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்து வருவதால், இன்னும் சில வருடங்களில் மிகப்பெரிய வீரராகவும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்று வீரத்தை அடைந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் பெறுவார் என்று பலரும் கணித்து வருகின்றனர்.

அதேபோல் இங்கிலாந்து அணியை சேர்ந்த அதிரடி நாயகன் ஹாரி ப்ரூக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் டி20 இன்னிங்ஸ் போன்று அதிரடியாக விளையாடி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகி, முதல்முறையாக பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

பாகிஸ்தானில் முதல்முறையாக இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தார். தொடர்நாயகன் விருதையும் பெற்றார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அபாரமாக விளையாடி வருகிறார்.

இங்கிலாந்து அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி வரும் இவரும் அடுத்த சில வருடங்களில் மிகப்பெரிய வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் ஸ்டீவ் ஸ்மித்-இடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக ஹரி ப்ரூக்ஸ் அல்லது ஷுப்மன் கில் இருவரில் யார் கிரிக்கெட் உலகில் அடுத்த சூப்பர் ஸ்டார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சந்தேகத்திற்கு இடமின்றி ஹாரி ப்ரூக்ஸ் என்று ஸ்டீவ் ஸ்மித் பதில் கூறினார்.