சச்சின், விராட் கோலி தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர் தான் – தேர்வு செய்த பிரெட் லீ!

0
11367

தலைசிறந்த பேட்ஸ்மேன் யார்? தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யார்? தான் எதிர்கொண்டதிலேயே கடினமான கிரிக்கெட் வீரர் யார்? ஆகிய கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் பிரெட் லீ.

கிரிக்கெட் வரலாற்றில் 2000களில் தன்னுடைய அதிவேக பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்கவிட்டவர் பிரெட் லீ. இவரது பந்துவீச்சு எதிர்கொள்ள தயங்கியவர்கள் எண்ணிக்கை ஏராளம்.

- Advertisement -

2003 மற்றும் 2007 50-ஓவர் உலகக்கோப்பைகள், 2006, 2009 ஆகிய இரண்டு சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைகளை வென்றுள்ளார். அத்துடன் 2003ஆம் ஆண்டு உலககோப்பையில் ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்தார்.

வேகப்பந்து வீச்சில் ஹீரோவாக வலம் வந்த இவரை கிரிக்கெட் உலகம் ஒருபோதும் மறந்திறாது. 2000களில் ஹீரோக்களாக வளம்வந்தவர்களை நினைவுகூறும் விதமாக ஜியோ நிறுவனம் கிரிக்கெட் ஹீரோக்களை பேட்டியெடுத்து பல நினைவுகளை வெளிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரெட் லீ கலந்துகொண்டு தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

இவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதில் குறிப்பிடத்தக்கவிதமாக யார் சிறந்த கிரிக்கெட் வீரர்? யார் சிறந்த பேட்ஸ்மேன்? மற்றும் எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது கடினமாக இருந்தது? தினம் கேள்விகளுக்கு பதில் கூறினார்.

- Advertisement -

“ஜாகுவஸ் காலிஸ் தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவரைப் போன்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சம அளவில் பங்களிப்பை கொடுத்து ஆதிக்கம் செலுத்தியவர்கள் எவரும் இல்லை. இன்றளவும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.” என்று பதில் கூறினார் பிரெட் லீ.

“தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. அவரது விக்கெட்டை எடுப்பதற்கு பல பவுலர்கள் கனவு கண்டுள்ளனர். அவருடைய பேட்டிங் திறமை மற்றும் அவருடைய ரெக்கார்டுகள் என அனைத்தையும் வைத்து சந்தேகத்திற்கு இடம் இன்றி சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறிவிடலாம்.”

லாரா அல்லது சச்சின்? யாருக்கு பவுலிங் செய்வது கடினமாக இருந்தது?.. “சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு இடத்தில் பவுலிங் போட்டால் தொடர்ந்து 6 பந்துகளும் அதே இடத்தில் அடிக்கக்கூடிய அசராத நேர்த்தியான பேட்ஸ்மேன். அதேநேரம் லாராவிற்கு ஒரு இடத்தில் பௌலிங் போட்டால், அதே பந்தை ஆறு விதமாக அடிக்கக்கூடியவர். ஆகையால் லாராவிற்கு பவுலிங் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. சச்சின் டெண்டுல்கர் டெக்னிக்கல் வகையில் சிறந்த பேட்ஸ்மேன். இவருக்கு பவுலிங் செய்வது சவலானது. இருவரையும் விக்கெட் எடுப்பது மிகவும் கடினம்.” என்று பதில் சொன்னார் பிரெட் லீ.