ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக் கூடாது; பாதியில நாட்டுக்காக ஓடுறத ஏத்துக்க முடியாது ; ஆர்ச்சரை விளாசித் தள்ளிய சுனில் கவாஸ்கர்!

0
620
Gavaskar

ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் வந்து எட்டு கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். காயத்தால் கடந்த ஆண்டு அவர் கிடைக்க மாட்டார் என்று தெரிந்தும் மும்பை அவரை வாங்கியது.

ஆனால் இந்த ஆண்டு அவர் உடல் தகுதி இல்லாமலே அணிக்கு விளையாட வந்து நடுவில் மருத்துவத்திற்காக சென்று பின்பு மீண்டும் விளையாடி தற்பொழுது இங்கிலாந்து திரும்பி விட்டார்.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீர சுனில் கவாஸ்கர் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து ஜோப்ரா ஆர்ச்சரை விளாசி தள்ளி இருக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ஆர்ச்சரின் மும்பை இந்தியன்ஸ் அனுபவம் என்ன? அவர் காயம் அடைந்திருக்கிறார் இந்த சீசன் மட்டுமே கிடைப்பார் என்று தெரிந்து தான் வாங்கினார்கள். அவருக்காக பெரிய பணம் கொடுத்தார்கள். ஆனால் அவர் அணிக்காக என்ன திருப்பி கொடுத்தார்?

அவர் 100% உடல் தகுதியுடன் இல்லை என்றால் அதை அணி நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்க வேண்டும். இல்லை பந்து வீச வந்த பொழுதுதான் தெரிந்தது என்றாலும், அவர் போட்டிக்கு இடையில் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாகவே சொன்னதிலிருந்து அவர் உடல் தகுதியுடன் இல்லை என்பது தெளிவாகிறது.

- Advertisement -

ஆனால் அவர் இங்கு வந்து உடல் தகுதி இல்லாமல் பங்கேற்று சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, பிறகு நாட்டுக்காக செல்கிறேன் என்று கிளம்பிவிட்டார். ஆனால் அவர் ஒன்று கடைசி வரை தனது ஐபிஎல் அணிக்காக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை.

ஒருநாள் கழித்து உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாட போவதாகவும், அதற்காக அவர் மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெறப்போகிறார் என்று ஒரு கதை உருவாகிறது. இது மிகப்பெரிய திசை திருப்பல் தந்திரமாகத்தான் இருக்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் எப்பொழுதும் எதிர்காலத்திற்காக ஒரு நொண்டிக் குதிரை மீது பந்தயம் கட்ட மாட்டார்கள். ஆர்ச்சர் இப்படி இருந்து கொண்டு முழு சம்பளத்தையும் பெறுகிறார். அவர் இதில் பாதி சம்பளத்தை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுப்பது நல்லது.

இப்படியான ஒரு வீரருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கவே கூடாது. அவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தரக்கூடாது. ஒன்று நாட்டுக்காக விளையாட வேண்டும் இல்லை ஐபிஎல் வந்தால் ஐபிஎல் தொடரின் அணிக்காக விளையாட வேண்டும்.

ஆரம்பத்திலேயே அணி உரிமையாளர்கள் இப்படி பாதியில் வருவதற்கும் போவதற்கும் விட்டு மெத்தனமாக இருந்தார்கள். குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் இப்படி செய்தார்கள். ஆனால் இதை அனுமதிக்க கூடாது. ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்கிறதா இல்லையா என்று தெரியும் வரை அவர்கள் அணியில் இருக்க வேண்டும். ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றால் ஒரு வாரம் முன்னதாக தாராளமாக நாட்டிற்கு போகட்டும்!” என்று கூறியிருக்கிறார்!