“வழக்கம்போல இல்ல.. கிரீனை வாங்குனதுக்கு காரணம் இதுதான்!” – மாஸ்டர் பிளானை உடைத்த பாப் டு பிளிசிஸ்!

0
1072
Faf

அடுத்த வருடம் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் துபாயில் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி நடக்க இருக்கின்றது. இதில் ஒவ்வொரு அணிகளுக்கும் கூடுதலாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மினி ஏலத்தில் 1155 வீரர்கள் பெயர் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் அணிவித்து அணிக்கு வீரரை பரிமாற்றம் செய்து கொள்வதற்கான கடைசி நாளாக டிசம்பர் 13ஆம் தேதி இருக்கிறது. இதுவரை நடந்த வீரர்கள் பரிமாற்றத்தில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஆவேஸ் கான் மற்றும் தேவ் தத் படிக்கல்லை மாற்றிக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத பெரிய டிரேடிங் நிகழ்வாக குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 15 கோடி ரூபாய்க்கு சென்றிருக்கிறார். மும்பை தன் தரப்பிலிருந்து எந்த வீரர்களையும் குஜராத் அணிக்கு தரவில்லை. இந்த டிரேடிங் ஐபிஎல் உலகில் பெரிய ஆச்சரியத்தையும் அதே நேரத்தில் சர்ச்சைகளையும் கொண்டு வந்தது.

ஹர்திக் பாண்டியாவை குஜராத்தில் இருந்து டிரேடிங் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருந்த காரணத்தினால் கடைசி நேரம் வரை மும்பை யாரை வெளியில் விடப் போகிறது என்பது தெரியாமல் இருந்தது.

மும்பை அணி கேமரூன் கிரீனை அணியில் தக்க வைத்ததாகவே முதலில் அறிவித்தது. ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் 15 கோடி ரூபாய்க்கு வாங்கியதும், கேமரூன் கிரீனை 17.25 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மும்பை உடனே டிரேடிங் செய்து விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய கையிருப்பாக தற்பொழுது 27 கோடி ரூபாய் வைத்திருக்கிறது. தரமான வேகப்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு இருக்கிறது.

மேலும் கேமரூன் கிரீன் அணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசையில் இருந்த பலவீனம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. பெங்களூரு மைதானத்தில் பவர் ஹிட்டிங் விளையாட ஆள் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் கேமரூன் கிரீனை வாங்கிய காரணம் குறித்து கூறும் பொழுது “சின்னசாமி மைதானத்திற்கு நாங்கள் எதிர்பார்த்த ஆல்ரவுண்டர் வரிசையில் கேமரூன் கிரீன் பெயரே முதலில் இருந்தது. அவர் பந்தை கடினமாக அடிக்கக்கூடியவர். மேலும் அவரது பந்துவீச்சை பொறுத்தவரை எங்கள் மைதானத்தில் அவருக்கு நல்ல பவுன்ஸ் கிடைக்கும். இந்த காரணங்களால் தான் அவரை நாங்கள் டிரேடிங் செய்தோம்!” என்று கூறி இருக்கிறார்!

இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக கேமரூன் கிரீன் 16 போட்டிகளில் விளையாடி 50 ஆவரேஜில் 452 ரன்களை 160 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடக்கம். மேலும் அவர் ஆறு விக்கட்டுகளும் கைபற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!