இனி 50 நாளைக்கு எதுவுமே கிடையாது.. அதனால கோலி இத செஞ்சு தான் ஆகணும் – ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தல்

0
117

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி கடைசியாக டி20 உலக கோப்பையை வென்ற கையோடு டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். இனி டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க உள்ள விராட் கோலிக்கு இந்த வருடம் குறைந்த அளவிலான ஒரு நாள் போட்டிகளே இருக்கின்றன. அது தவிர சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் உள்ளன.

தற்போது லண்டனில் வசித்து வரும் விராட் கோலி இனி இந்த இரண்டு தொடர்களில் மட்டுமே பங்கேற்பதற்காக இந்தியாவில் வசிப்பார் என்று தெரிகிறது. சமீபத்தில் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

- Advertisement -

ஆனால் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த இரண்டு சீனியர் வீரர்களையும் இந்திய அணிக்கு அழைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விராட் கோலி இனி வரும் அனைத்து போட்டியிடிலும் விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா விரிபாக கூறும்போது “சந்தேகத்திற்கு இடமில்லாமல் விராட் கோலியை இனி மூன்றாம் இடத்தில் பார்ப்பீர்கள். அதில் இனி எந்த சந்தேகமும் இல்லை. இனி வரும் காலங்களில் அது கட்டாயமாக நடக்க வேண்டும். விராட் கோலியை விளையாட விடுங்கள். விராட் கோலி விளையாட வேண்டும். உலகக் கோப்பை முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. இனி அவர் விளையாட வேண்டும். ஏனென்றால் இதற்குப் பிறகு 45 நாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் கிடையாது.

இதையும் படிங்க:IND vs SL: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்.. காரணம் என்ன.?

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் வருகிற ஒன்பதாம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கு அடுத்ததாக டெஸ்ட் போட்டி வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. நீங்கள் 40 முதல் 50 நாட்கள் வரை விளையாட வேண்டியது இல்லை என்றால் இந்தியா விளையாடும் போட்டிகளில் எல்லாம் நீங்கள் மூன்றாம் இடத்தில் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -