விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பற்றி கவலை இல்லை! – காரணத்தை விளக்கிய ரிக்கி பாண்டிங்!

0
374
Viratkohli

2023 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நாக்பூர் மற்றும் டெல்லியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் மற்றும் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் வலுவான முன்னிலையை பெற்றது!

இந்த நிலையில் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமாக இருக்க அதை இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் முதலில் பேட் செய்யும் பொழுது கணிப்பதற்கு முன்னாலே அடிப்பதற்கு சென்று விக்கட்டுகளை இழந்ததால் முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு இடத்திலும் இந்திய அணியால் மீண்டும் திரும்பி வரவே முடியவில்லை. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றால் போல் போராட அவர்களுக்கு ஓரளவுக்கு ரன்கள் கிடைத்தது. இதனால் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற்றார்கள்!

நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விராட் கோலி 111 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அவரிடம் பேட்டிங்கில் எந்த தடுமாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. ஆனால் நிலையான பிறகு திடீரென்று தனது விக்கட்டை பறிகொடுக்கிறார். இது அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து வெளியில் பல விமர்சனங்களை தற்பொழுது உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் லெஜன்ட் வீரர் மற்றும் கேப்டன் ரிக்கி பாண்டிங் ” விராட் கோலியை பொருத்தவரை நான் எப்பொழுதும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்வது, மிகத் திறமையான வீரர்களுக்கு அவர்கள் எப்படி திரும்பி வரவேண்டும் என்று தெரியும் அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள். திரும்பி வருவதற்கான வழியை அவர்களே கண்டறிவார்கள். விராட் கோலியின் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து வெளியே வர வழியை கண்டுபிடிப்பார். எனக்கு அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. நீங்கள் ஒரு பேட்மேனாக இருந்து ரன்கள் எடுக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், பிரச்சனை என்னவென்று நீங்களே அறிவீர்கள் அது உங்களுக்கு தெரியும். அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் இது தொடர்பாக கூறிய அவர்
” இந்தத் தொடரில் நான் யாருடைய பேட்டிங் பார்மையும் பார்க்கவில்லை. ஏனென்றால் இங்கு ரன்கள் கொண்டு வருவது பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இரண்டு போட்டிகளை தோற்று மூன்றாவது போட்டியில் வென்று திரும்பி வந்திருப்பது நம்ப முடியாத கடினமான விஷயம். இந்த டெஸ்ட் தொடரில் பந்து திரும்புகிறது என்றில்லாமல், பந்து சீரற்ற பவுன்ஸ்ரோடு இருக்கிறது. இப்படி இருந்தால் நீங்கள் எப்பொழுதும் விக்கட்டை பற்றி யோசித்துக் கொண்டே இருப்பீர்கள் மேலும் நம்பிக்கையை இழப்பீர்கள். இது பேட்டிங் செய்வதை கடினமாக்குகிறது” என்று கூறியிருக்கிறார்!