“உலககோப்பை இல்லை.. இந்த தொடரில் இந்திய அணியில் வாய்ப்பில்லாதப்ப வருத்தப்படடேன்” – ஷிகர் தவான் மவுனம் கலைப்பு

0
192
Shikar

இந்திய அணி கடந்த ஆண்டு மே மாத இறுதியில் உள்நாட்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு, உடனே இங்கிலாந்து சென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விளையாடி தோற்றது.

இதற்கு அடுத்து ஏறக்குறைய ஒரு மாத காலம் இந்திய அணி ஓய்வில் இருந்தது. இதற்கு அடுத்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் பயணப்பட்டது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு அடுத்து முக்கிய வீரர்கள் கொண்ட அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு தயாராவதற்கு இந்தியா வந்தது.

இதற்கு நடுவில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணிக்கு இருந்தது. அந்தத் தொடருக்கு பும்ரா தலைமை வகித்தார். இதற்கு அடுத்து ஆசிய கோப்பை முடிந்து உலகக்கோப்பை தொடங்கும் நேரத்தில் சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் ஆண் பெண் அணிகள் கலந்து கொண்டன.

ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருந்த பொழுதே ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆண்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செல்வார் என்று உறுதியாக வெளியில் தகவல்கள் வந்தன.

- Advertisement -

இந்த நிலையில் தேர்வுக்குழு அதிரடியாக ருதுராஜ் தலைமையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அணியை அனுப்பியது. இனி ஷிகர் தவான் இந்திய அணியில் எப்பொழுதும் இடம் பெறப் போவதில்லை என்பதற்கான மறைமுக அறிவிப்பாகவே அது அமைந்தது.

இது குறித்து தற்போது பேசி உள்ள ஷிகர் தவான் “ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் எனது பெயர் இல்லாத பொழுது நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வித்தியாசமான சிந்தனை செயல் முறையில் இருந்தது. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நான் எப்பொழுதும் தேர்வாளர்களிடம் எனது எதிர்கால கிரிக்கெட் குறித்து பேசியதில்லை. நான் இப்பொழுதும் என்சிஏ செல்கிறேன். கிரிக்கெட் தொடர்பாக அங்கு என் நேரத்தை செலவிடுகிறேன். அங்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. என் கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைத்ததில் என்சிஏவுக்கு பெரிய பங்கு இருக்கிறது. நான் அதற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

எனக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாக நான் நினைக்கிறேன். என்னுடைய இந்த பயணத்தில் ஆதரவாக வந்த பயிற்சியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், துணைப் பணியாளர்கள், பிசிசிஐ, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்.