வில்லியம்சன் கான்வே இல்லை.. 30 ஓவர்.. பங்களாதேஷை பந்தாடிய நியூசிலாந்து.. 171 ரன் ஜோடி!

0
233
NZ

நியூசிலாந்து பங்களாதேஷ் நாட்டில் கடந்த சில வாரத்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருந்தது. தற்பொழுது பங்களாதேஷ் நியூசிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. தல 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

இன்று இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து அணியில் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் மற்றும் கான்வே போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை பெய்த காரணத்தினால் 30 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது.

பங்களாதேஷ் அணியின் சோரிஃபுல் இஸ்லாம் வீசிய முதல் ஓவரில் ரச்சின் ரவீந்தரா மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் ரன் ஏதும் இன்றி வெளியேறினார்கள். ஆனால் இது பங்களாதேஷ் அணிக்கு தற்காலிக மகிழ்ச்சியாக மட்டுமே அமைந்தது.

இதற்கடுத்து ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் கேப்டன் டாம் லாதம் இருவரும் 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டாம் லாதம் 77 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 92 ரன்கள் சேர்த்தார். வில் யங் அதிரடியாக 84 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 105 ரன்கள் குவித்தார். 30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து ஏழு விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பங்களாதேஷ் அணிக்கு 245 ரன்கள் 30 ஓவர்களில் அடிக்க வேண்டும் என்கின்ற இலக்கு கொடுக்கப்பட்டது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அனாமுல் ஹக் 43, ஹ்ரிடாய் 33, அபிப் உசைன் 38, மெகதி ஹசன் மிராஸ் 28* என இவர்கள் மட்டுமே சிறிய ரன் பங்களிப்பு தந்தார்கள்.

பங்களாதேஷ் அணியால் 30 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நியூசிலாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. பங்களாதேஷ் தரப்பில் ஆடம் மில்னே, சோதி மற்றும் கிளார்க்சன் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.