69 ரன்னுக்கு விக்கெட் இல்லை; அடுத்த 67 ரன்னுக்கு 8 விக்கெட்; அதிகாரப்பூர்வமாக டெல்லி முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறுகிறது!

0
375
Ipl2023

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்று டெல்லி பந்து வீசியது. பஞ்சாப் அணிக்கு ஒருமுனையில் பிரப் சிம்ரன் நின்று விளையாட மற்றவர் எல்லோரும் வருவதும் போவதுமாக இருந்தனர்.

- Advertisement -

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்கேப்டு இந்தியன் பிளேயர் பிரப்சிம்ரன் 61 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். இறுதியாக 65 பந்தில் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பஞ்சாப் அணிக்கு மற்றவர்கள் சிகர் தவான் 7, லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் சர்மா 5, சாம் கரன் 20, ஹர்ப்ரித் பிரார் 2, ஷாருக்கான் 2, சிக்கந்தர் ராஸா 11* ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் வந்தது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா மூன்று ஓவர்களுக்கு 27 ரன்கள் தந்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சராசரியான இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி அணிக்கு 6.2 ஓவரில் 69 ரன்கள் முதல் விக்கெட்டுக்கு கிடைத்தது. இதற்கு அடுத்த 67 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பிளே ஆப் வாய்ப்பில் இருந்து டெல்லி வெளியேறியது.

- Advertisement -

டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் 54, பில் சால்ட் 21, மார்ஷ் 3, ரூசோ 5, அக்சர் படேல் 1, அமான் கான் 16, மனிஷ் பாண்டே 0, பிரவீன் டுபே 16, குல்தீப் யாதவ் 10, முகேஷ் குமார் 6 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பரித் பிரார் நான்கு ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் 12 புள்ளிகள் உடன் பிளே ஆப் வாய்ப்பில் பஞ்சாப் தொடர்கிறது. இந்த தோல்வியின் மூலம் டெல்லி பிளே ஆப் வாய்ப்பிலிருந்து முற்றிலுமாக முதல் அணியாக வெளியேறிவிட்டது!