இவரை பிளேயிங் லெவனில் ஆடவைக்கிறோம், இந்திய பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைப்பார் – தன்னுடைய பிளேயிங் லெவனை சொன்ன ஆஸி., கேப்டன் கம்மின்ஸ்!

0
1176

“இந்த வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்போகிறோம். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.” என தனது சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்திருக்கிறார் பாட் கம்மின்ஸ்.அத்துடன் தங்களது பிளேயிங் லெவன் என்னவென்று கிட்டத்தட்ட கூறிவிட்டார்.

ஆஸ்திரேலியா அணி வருகிற ஏழாம் தேதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி வருகிற 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. நடுவில் மழை காரணமாக ஏதேனும் ஒரு நாள் போட்டி தடைப்பட்டுவிட்டால் அதை ரிசர்வ் நாளுக்கு தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்கிற வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணி ஏற்கனவே ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்று நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. தற்போது இரண்டாவது முறையாக பைனலுக்குள் வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இதுவே முதல் முறையாகும். கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டது.

இங்கிலாந்து கண்டிஷன் ஆஸ்திரேலியா அணிக்கு பலமுறை பழக்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்திய அணிக்கு அங்கு ரெக்கார்டுகள் சாதகமாக அமையவில்லை. ஆகையால் இம்முறையும் இந்திய அணி தோல்வியை தழுவும், ஆஸ்திரேலியா அணியும் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று பல முன்னணி வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவையனைத்தும் கணிப்புகள், கருத்துக்களே. இது உண்மையில்லை. இவற்றை பொய்யாக்குவோம் என்று சமீபத்திய பேட்டியில் கேப்டன் ரோகித் சர்மா கூறினார். அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில்,

- Advertisement -

“இந்திய அணியை எந்த வகையிலும் குறைத்து எடைபோட முடியாது. சமீபத்தில் அவர்களது வேகப்பந்துவீச்சு சிறப்பாகவே இருந்திருக்கிறது. ஆகையால் நாங்கள் எங்களது பயிற்சிகளை செய்து வருகிறோம். எந்த வகையிலும் யாரையும் குறைத்து எடை போடவில்லை.” என்றார்.

மேலும் பேசிய அவர், “முக்கியமான வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் இல்லாதது பின்னடைவை தந்தாலும், சமீப காலமாக ஸ்காட் போலன்ட் செயல்பட்டு வரும் விதம் மிகுந்த திருப்தியை கொடுக்கிறது. தொடர்ச்சியாக ஒருநாள் முழுவதும் ஒரே இடத்தில் பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். மேலும் பந்துவீச்சில் பெரிதளவில் ஸ்விங் இல்லாதபோதும் ஸ்விங் செய்யக்கூடியவர். பார்ட்னர்ஷிப்களை உடைக்கக்கூடியவர். இந்திய வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அச்சுறுத்துவார்கள். அந்த சூழலில் போலன்ட் சரியான வீரராக இருப்பார்.

மேலும் இங்கிலாந்து கண்டிஷனில் அவர் சில போட்டிகளை விளையாடியுள்ளார். இங்கு பழக்கப்பட்டவரும் கூட. ஹேசல்வுட் இல்லாத இடத்தில் அவரை விளையாட வைத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மன்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து விரைவாக விக்கெட்டுகளை எடுக்க திட்டமிட்டு இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசானே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்