“சச்சின் கிடையாது.. எனக்கு சிறந்த பேட்ஸ்மேன் எப்பவும் இவர்தான்!” – ஹாரி புரூக் அதிரடி தேர்வு!

0
2406
Sachin

கிரிக்கெட் நவீனமடைந்த காலம் 90கள் என்று கூறலாம். நவீனம் அடைவதற்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் ரிச்சர்ட்ஸ் அதிரடியான பேட்டிங் அணுகுமுறை மூலமாக ஒரு கவர்ச்சியை உருவாக்கி இருந்தார்.அவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருந்தார்கள். சூழ்நிலையை பொறுப்பெடுத்தாமல் ஒரே வேகத்தில் விளையாடுவது அவருடைய தனிச்சிறப்பு.

இதற்குப் பிறகு எண்பதுகளின் இறுதியில் தனது 16வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சச்சின், 90களின் மத்தியில் தனது நளினமான சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த பேட்டிங் மூலமாக ரிச்சர்ட்சைவிட அதிக புகழ்பெற்றவராக குறுகிய காலத்தில், சிறிய வயதில் மிக உயரிய இடத்தை தொட்டார்.

- Advertisement -

குறிப்பாக 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலும் அவர் பேட்டிங் செய்ய வரும் பொழுதெல்லாம் ஒரு புதிய சாதனை உருவாகிக்கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு வகையில் யாருடைய சாதனையாவது தகர்ந்து கொண்டிருக்கும்.

சச்சின் பெயரில் மட்டும் அவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளுக்கு தனியாக சின்னதாக ஒரு புத்தகம் எழுத வேண்டும். அந்த அளவிற்கு அவர் பழைய கிரிக்கெட் முறைகளிலிருந்து புதிய கிரிக்கெட்டில் சாதனைகளைப் படைக்க ஆரம்பித்து இருந்தார்.

அவரது புகழ் எந்த அளவிற்கு பரவி இருந்தது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மின்சார வசதி செல்லாத இந்தியாவின் குக்கிராமத்தில் கூட சச்சின் சென்று சேர்ந்திருந்தார். அவரது பெயரும் முகமும் மக்களுக்கு அவ்வளவு பரிச்சயப்பட்ட ஒன்றாக இருந்தது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என அவர் மலைப்பான ஒரு சாதனையை படைத்து, அடுத்து வரக்கூடிய இளம் வீரர்களுக்கு உந்துதலை தரக்கூடிய ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டு ஓய்வு பெற்றார்.

ஒருநாள் கிரிக்கெட் என்றாலே அது சச்சின்தான் என்கின்ற அளவுக்கு அதில் அவருடைய முத்திரை இருக்கிறது. மேலும் சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டின் அறிவிக்கப்படாத விளம்பர தூதுவராகவே இருந்தார்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று பேசி உள்ள இங்கிலாந்தின் இளம் வீரர் ஹாரி புரூக் ” விராட் கோலி இப்போது மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர். அவர் எது ஒன்றையும் செய்யும் விதம் மற்றும் விக்கட்டுக்கு இடையே ஓடும் விதத்தில் உலகில் தலை சிறந்தவர் அவர்தான். நீங்கள் அவர் இன்னிங்ஸை உருவாக்குவதை பாருங்கள். அவர் விளையாடிய சில இன்னிங்ஸ்களை பார்க்கும் பொழுது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!