ரோகித் இல்ல.. என் 500 விக்கெட் கேரியரில்.. இவங்க 3 பேரு தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்… நாதன் லியோன் அதிரடி தேர்வு

0
3440

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற நட்சத்திர சுழற் பந்துவீச்சாளராக திகழ்பவர் நாதன் லயன். அவர் தனக்கு எதிராக விளையாடிய மூன்று சிறந்த பேட்டர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய மைதானங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சிற்கு சாதகமானவை. ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹாசில்வுட் ஆகியோர் ஜொலிக்கக் கூடிய நட்சத்திரங்கள். ஆனால் ஆஸ்திரேலியா அணியில் வேகப்பந்துவீச்சைத் தவிர்த்து சுழற் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் அதில் நாதன் லயன் நிச்சயமாக இடம் பெறுவார். அவர் ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் மட்டுமின்றி உலகில் எந்த ஆடுகளத்திலும் விக்கெட் எடுக்கக்கூடிய தனித்திறமை கொண்டவர்.

- Advertisement -

ஆப் ஸ்பின்னர் ஆன இவர் பேட்டிங் ஜாம்பவான்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்திய நட்சத்திரம் விராட் கோலியை 7 முறை அவுட் ஆக்கி வெளியேற்றியுள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவரது புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கை நீடித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அதில் நாதன் லயன் தனது சிறப்பான சுழற் பந்து வீச்சினை ஆஸ்திரேலியா அணிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் நடைபெற உள்ளது. பகல் இரவு ஆட்டம் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஸ் செய்யும் முனைப்பில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நாதன் லயன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தான் சந்தித்த சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக கையாண்ட யுத்திகள் பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார். சிட்னி மைதானத்தின் சமூக ஊடகத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவர் மூன்று கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்களை வெளியிட்டார். இது குறித்த அவர் கூறியதாவது

- Advertisement -

“நான் எதிர்த்து விளையாடிய சிறந்த வீரரை பற்றி கேட்கிறீர்கள், இது மிகவும் கடினமான கேள்வி. இருப்பினும் நான் அதற்கு பதில் அளிக்கும் விதமாக உங்களுக்கு மூன்று பெயர்களைக் குறிப்பிடுகிறேன். அது விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ். அவர்களை வெளியேற்றுவது மிகவும் சவாலானது. மற்ற பேட்ஸ்மேன்களைக் காட்டிலும் அவர்களை வெளியேற்ற நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிராக அவரின் செயல்பாடு எப்போதுமே சிறப்பான வகையில் இருக்கும். அவர் இந்தியாவுக்கு எதிராக 27 டெஸ்ட் போட்டிகளில் 121 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 50 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இது அவரின் சிறந்த சராசரி ஆகும்.

இவர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுத்ததன் மூலம் மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முத்தையா முரளிதரன், வார்னே மற்றும் அணில்கும்ளே ஆகியோரின் வரிசையில் 500 விக்கெட்டைகளை வீழ்த்திய நான்காவது சுழற் பந்துவீச்சாளராக உள்ளார். 2024 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோத உள்ளன.

அதில் நாதன் லயன் தனது சிறப்பான பந்து வீச்சினை அளிப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.