அஸ்வினுக்கு இடமில்லை… ஹர்பஜனுக்கு இடம்.. மொயின் அலி செலக்ட் செய்த ஆல் டைம் சிஎஸ்கே XI

0
609

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி தற்போது ஆஷஸ் தொடரில் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு விளையாடி வருகிறார் . தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அரை சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

இந்த இரண்டு அணியிலும் சிஎஸ்கே வின் ஆல்ரவுண்டராக மொயின் அலி இடம் பெற்று இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர் இந்த ஆண்டு பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆனால் பந்து வீட்டில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் களம் இறக்கப்பட்ட மொயின் அலி இந்த முறை நான்காவது அல்லது ஐந்தாவது இடங்களில் தான் இறக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கூட அவரது பேட்டிங் பாதித்திருக்கலாம்.

- Advertisement -

சமீபகாலமாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சிறந்த ஆல் டைம் சிஎஸ்கே 11 அணியை தேர்வு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோன்று மொயின் அலியும் தனது ஆல் டைம் சிஎஸ்கே 11 அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த அணியில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் முன்னாள் துவக்க வீரருமான பாப் டுப்ளசிஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரும் இடம் பெறவில்லை என்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

மொயின் அலியின் ஆல் டைம் சிஎஸ்கே 11 :
ருத்ராஜ்
வாட்சன்
ரெய்னா
ராயுடு
ஹஸ்ஸி
தோனி(கேப்டன்)
ஜடேஜா
பிராவோ
ஹர்பஜன்
சாஹர்
ஹேசில்வுட்.

- Advertisement -