“பணத்துக்காக இவங்க அட்டகாசத்தை யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்க!” – பிசிசிஐ மீது ரனதுங்கா கடுமையான விமர்சனம்!

0
832
Jai

நடப்பு ஆசியக் கோப்பை தொடர் மிகவும் சர்ச்சையான ஒரு தொடராக நடந்து வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே சர்ச்சைகள் துவங்க ஆரம்பித்துவிட்டது.

இந்த முறை ஆசியக் கோப்பையை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் நாட்டிடம் இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணியை அனுப்ப மறுத்துவிட்டது.

- Advertisement -

இதற்கடுத்து ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் அணியுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடத்துவது என்கின்ற முடிவு செய்யப்பட்டது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உயர் பொறுப்பில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் முடிவுகள் குறித்து தான் தற்பொழுது மிகவும் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரை இலங்கையில் நடத்தினால் அதிகபட்ச போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருக்கிறது. இப்படி இருந்தும் துபாயை நிராகரித்து இலங்கையில் நடத்தவே ஜெய் ஷா தரப்பு உறுதியாக இருந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டது. உண்மையில் இது மிகவும் தவறான ஒரு முடிவுதான். ஏனென்றால் ஒரு தொடருக்கு ஒரு விதி எனும் பொழுது அது அனைத்து அணிகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் இதுகுறித்து தற்பொழுது இலங்கை அணிக்கு 96ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் அர்ஜுன ரனதுங்க கூறும் பொழுது “ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் எங்கே? ஐசிசி எங்கே? ஒரு தொடரில் குறிப்பிட்ட போட்டிக்கு மட்டும் முடிவுகளை மாற்றுவது, மற்றவர்களுக்கு சரியான ஒன்று கிடையாது. நீங்கள் எதிர்காலத்தில் ஒரு பேரழிவை உண்டாக்குகிறீர்கள்.

ஏனென்றால், ஏசிசி மற்றும் ஐசிசி இவர்கள் பொறுப்புகளை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே நினைக்கிறார்கள் என்பதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு பணம் தேவை என்பதால் இவர்கள் செய்வதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இவர்கள் வருகின்ற உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை மாற்றினால் கூட நான் அதில் ஆச்சரியப்பட மாட்டேன். அப்படி நடக்கும் பொழுது ஐசிசி வாயை மூடிக் கொண்டு ” அதைச் செய்யுங்கள்” என்று அனுமதிக்கும். வேறு எதுவும் நடக்காது என்று மிகக் கடுமையாக கூறியிருக்கிறார்!