“யாருக்குமே இன்ட்ரஸ்ட் இல்ல.. ஸ்கூல் டெஸ்ட் மாதிரி இருக்கு.. எதுக்கு இந்த சீரியஸ் விளையாடுறிங்க?” – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!

0
1128
Rohit

இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவது நாம் அறிந்ததே.

இன்று இந்த தொடரின் இறுதி மற்றும் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு இந்திய நட்சத்திர வீரர்கள் திரும்ப வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

உலகக் கோப்பை மிக அருகில் இருக்கின்ற காரணத்தினால், இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டு அணிகளுமே பயிற்சி போட்டிகளைப் போல தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி தங்களின் பரிசோதனைக்காக வைத்திருக்கும் வீரர்களைக் கொண்டே மிக முக்கியமாக விளையாடி வருகிறது. இந்தியாவோ யார் யாருக்கெல்லாம் வீட்டுக்கு போக வேண்டுமோ அவர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அளவில்தான் இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தாலும் கூட, உலகக் கோப்பை துவங்குவதற்கு நேரம் மிகக் குறைவாக இருக்கின்ற பொழுது, இந்தத் தொடரை விளையாட வேண்டாம் என்று வெளியில் இருந்து பல குரல்கள் எழுந்தது என்று குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “மூன்றாவது போட்டிக்கு ரோஹித் மற்றும் விராட் இருவரும் அணிக்கு திரும்பினார்கள். ஆனால் தற்போது பலவீரர்கள் அணியில் இல்லை. ஷர்துல் தாக்கூர் வீட்டுக்கு சென்றார். கில் கூட விளையாட மாட்டார். அக்சர் படேல் இன்னும் கிடைக்கவில்லை.

என்ன நடக்கிறது? அணியில் மொத்தமாக எத்தனை வீரர்கள்தான் இருக்கிறார்கள்? இதுகுறித்து எதுவுமே புரியவில்லை. ஆஸ்திரேலியா தரப்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பிற்கு ஸ்டார்க் வந்திருந்தார். எனவே அவர் நாளை விளையாடுவார் என்று நம்பலாம். ஆனால் இதையும் உறுதியாக சொல்ல முடியாது.

நாம் உலகக்கோப்பையில் விளிம்பில் இருக்கிறோம். இந்த நிலையில் இந்தத் தொடர் தேவையா? இந்த உணர்வு உங்களுக்கு வருகிறதா? பள்ளிக்கூடத்தில் பெரிய தேர்வுக்கு முன்னால் வைக்கப்படும் பேப்பர் டெஸ்ட் போல் இந்த தொடர் இருக்கிறது. இதில் பெரிதாக யாருக்கும் ஆர்வம் இருப்பதாகவே தெரியவில்லை!” என்பதாக விமர்சனம் செய்திருக்கிறார்!

மேலும் இந்த தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கூட நட்சத்திர வீரர்கள் அணிக்கு வருவதால் இந்த போட்டியை இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது நம்பிக்கை ரீதியாக அவசியம்!