” எங்க நாட்டுல இப்படி விளையாடி யாரையும் பார்த்ததே கிடையாது!” – இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஷேன் வாட்சன்!

0
3075
Watson

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றை எட்டி, கடந்த ஆண்டு முதல் சுற்றோடு வெளியேறி வந்ததற்கு பிராயச்சித்தம் செய்திருக்கிறது!

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் முக்கிய காரணமாக விளங்கியவர்கள் விராட் கோலியும் சூரியகுமார் யாதவும்தான்!

- Advertisement -

விராட் கோலி இதுவரை ஐந்து ஆட்டங்களில் மூன்று அரைசதங்களை ஆட்டம் இழக்காமல் அடித்துள்ளார். அதேபோல் சூரியகுமார் யாதவும் மூன்று அரை சதங்களை அடித்து அதில் இரண்டு அரை சதங்களின் போது ஆட்டம் இழக்காமல் இருந்துள்ளார்.

சூரியகுமார் யாதவ் நடுவரிசையில் பேட்டிங்கில் களமிறங்கி 180 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகின்ற மாதிரி டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் விளையாடியது கிடையாது. இது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் கூறும்பொழுது ” கடந்த இரண்டு வருடங்களாக சூரிய குமாரின் பேட்டிங்கை ஐபிஎல் தொடரில் பார்த்து, அவரது சிறப்பான பேட்டிங் விருந்தாக ஒன்றாக இருந்தது. ஆனால் அவரால் இதை சர்வதேச கிரிக்கெட்டிலும் செய்ய முடிந்ததுதான் சிறப்பான விஷயம். ஆஸ்திரேலியா சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் இவரால் செய்ய முடிந்த இந்த விஷயத்தை பலரால் செய்ய முடியாமல் இருந்து வந்திருக்கிறது இதுவரை ” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இது மிகவும் அரிதான திறமை. ஒரு பந்துவீச்சாளரை படிக்கும் திறன், அவர் எங்கே பந்து வீசப் போகிறார்? ஃபீல்டர்கள் எங்கே இருக்கிறார்கள்? பந்து எங்கே செல்ல வேண்டும்? என்பதை கட்டுப்படுத்துதல் மிகவும் அரிதான திறமையாகும். நாங்கள் இதற்கு முன்பு இப்படி அதிகம் பார்த்ததில்லை” என்று கூறியிருக்கிறார்!

இன்னும் தொடர்ந்து பேசிய அவர்
” இவ்வளவு தொடர்ச்சியாக சில ஆட்டங்களில் எல்லாத்தையும் செய்ய முடிகின்ற பொழுது அவர் எல்லாவற்றையும் மாற்றக் கூடியவராகத் தெரிகிறார். அவர் நீண்ட காலத்திற்கு இதை செய்யக் கூடியவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன் ” என்று புகழ்ந்து பேசி முடித்துள்ளார்!