“விராட் கோலிய சேசிங்ல யாராலும் தடுக்கவே முடியாது.. காரணம் இதுதான்!” – நாசர் ஹுசைன் வெளிப்படையான பேச்சு!

0
2450
Virat

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் மட்டுமல்லாது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தற்காலத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார்!

அதே நேரத்தில் மூன்று வடிவத்திலும் அவருக்கு மிகவும் சரியான வடிவமாக ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் இருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் அவர் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் பொழுது, ஏறக்குறைய எல்லோருடைய சாதனைகளையும் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்று எடுத்துக் கொண்டால் அவர் இலக்கை துரத்தும் போது விளையாடுகின்ற விதம் அபாரமான ஒன்று. ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும் போது அதிக சதம் அடித்த வீரராக அவரே இருக்கிறார்.

விராட் கோலி அழுத்தத்தை மிகச் சிறப்பாக கையாள கூடியவர் என்கின்ற காரணத்தினால், அவருக்கு இலக்கை நோக்கி விளையாடும் பொழுது எந்தவித சிரமமும் இருப்பதில்லை. மேலும் அழுத்தம் அவரை நல்ல விதத்தில் விளையாட தூண்டுகிறது என்பதும், இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த நிலையில் நேற்று விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலக்கை துரத்தும் பொழுது சதம் அடித்து அசத்தியிருந்தார். இது அவருக்கு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் 48வது சதமாகும்.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது “விராட் கோலி எப்பொழுதும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடக் கூடியவர். இதனால்தான் அவர் இலக்கை துரத்தும் பொழுது மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் ஸ்ட்ரைக்ரேட்டில் எப்பொழுதும் கவனம் வைக்க மாட்டார். ஏனென்றால் அவர் பந்தை எப்பொழுதும் அடித்து விளையாட நினைக்க மாட்டார்.

அவர் சூழ்நிலைக்குத் தகுந்தபடி மட்டுமே விளையாடுவார். ஒருவேளை நேற்று ஆடுகளம் வேறு மாதிரியாக இருந்து 350 ரன்கள் தேவைப்பட்டால், அவர் அதற்கும் தகுந்தாற்போல் கியரை மாற்றி விளையாடுவார். மேலும் இந்திய அணி வெற்றி பெறுவதை உறுதி செய்வார்.

ரோகித் சர்மா இதுவரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நான் பார்க்காத பேட்ஸ்மேன் போல இருக்கிறார். அவரது சாதனை மிகச் சிறப்பாக உள்ளது. அவர் உலகக் கோப்பையில் வெற்றிகரமாக இருந்திருக்கிறார். ரோகித் மற்றும் கில் இருவரும் சேர்ந்து உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!