“என்னை மதிச்சு வந்து பேட்டிங் டெக்னிக் சரி பண்ண யாரும் கேட்கல ; சேவாக் விஷயம்தான் ஞாபகம் வருது” – கவாஸ்கர் மனக்குமுறல்!

0
2332
Gavaskar

இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட தற்பொழுது முதலில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது!

இதற்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி படுதோல்வி அடைந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாகவே இந்திய அணி நிர்வாகம் அணி தேர்வில் மிகப்பெரிய தவறை செய்து ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியே வைத்தது. ஆஸ்திரேலியா அணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி இருக்கக்கூடிய அஸ்வினை வெளியே வைத்தது எவ்வளவு பெரிய தவறானது என்று பின்னால் புரிந்தது.

இன்னொரு பக்கம் இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் டெக்னிக் மிகப் படுமோசமாக இருந்தது. எந்தப் பந்தை விடுவது? எந்த பந்தை விளையாடுவது? எந்த இடத்தில் நின்று விளையாடுவது? என்று எல்லா வகையிலும் அவர்கள் திட்டமே இல்லாமல், மிகச் சாதாரணமாக தங்கள் விக்கெட்டுகளை இழந்தார்கள்.

இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி ஆட்டம் இழந்ததை பார்ப்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உலக அளவில் மிகப் பெரிய தரத்தை கொண்டிருக்கக் கூடிய வீரர்களாக விளங்கும் இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருந்து இப்படியான சாதாரண செயல்பாட்டை யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடும் புஜாரா ஆட்டம் இழந்த முறை இரண்டு முறையுமே ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து இந்தியாவின் முதல் பேட்டிங் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் பேட்ஸ்மேன் பேட்டிங் டெக்னிக்கை கைவிட்டிருக்கும் பொழுது அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்று அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறும் பொழுது
” பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரி தவறு செய்து ஆட்டம் இழந்து கொண்டே இருந்தார்கள் என்றால், அவர்கள் பேட்டிங் டெக்னிக் குறித்து அவர்களை கூப்பிட்டு பேச வேண்டும். உங்கள் பேட்டிங் டெக்னிக்கல் என்ன பிரச்சனை என்று கேட்க வேண்டும். அவர்கள் நின்று விளையாடும் முறையில் மாற்றம் தேவையா என்று பார்க்க வேண்டும். அவர்களை லெக் ஸ்டெம்ப் கார்டில் இருந்து விளையாடுவதை விட்டு, மிடில் அண்ட் ஆப் ஸ்டெம்ப் கார்டில் விளையாட சொல்ல வேண்டும். என்னிடம் எந்த வீரரும் பேட்டிங் டெக்னிக் சம்பந்தமாக இந்திய அணியில் இருந்து வந்து பேசவில்லை!

ஒருமுறை இது தொடர்பாக சேவாக்குக்கு கூறியது ஞாபகம் வருகிறது. அவரிடம் நான் ஆப் ஸ்டெம்ப் கார்டு எடுத்து நிற்க சொன்னேன். அவர் அதற்கு என்னிடம் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார். உங்களுக்கு வெளியே செல்லும் பந்துகளை நீங்கள் எந்த பக்கம் நின்றால் கைகளை நீட்டி அடிப்பதற்கு சிரமமாக இருக்கும். அதுவே நீங்கள் அந்தப் பக்கமாக நின்றால் வெளியே செல்லும் பந்து உங்களுக்கு மிக அருகில் இருக்கும். நீங்கள் விளையாடுவதற்கு வசதியாக இருக்கும் என்று சொன்னேன். இப்படியான விஷயங்களில் தான் பயிற்சியாளர்கள் உள்ளீடுகளை பேட்ஸ்மேன்களுக்கு தர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!