நியூசிலாந்து டி20 தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா நீக்கம்.. இனி அவர்களுக்கு எப்போதும் இடமில்லையாம் – பிசிசிஐ கொடுத்த ஷாக்!

0
3582

இனி டி20 போட்டிகளில் மூத்த வீரர்களுக்கு அணியில் இடமில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது பிசிசிஐ தரப்பு.

இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் தொடர் முடிவுற்றவுடன் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தலைமை தேர்வுக்குழு அதிகாரியாக இருந்த சேத்தன் சர்மா மீண்டும் தலைமை தேர்வுக்குழு அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார் என தெரிகிறது.

அவர் தலைமையிலான குழு நியூசிலாந்து தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்து வருகிறது. டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இடம் இல்லை என திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கும் இனி டி20 யில் இடம் கொடுக்கக் கூடாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரி ஒருவர் பேசுகையில், “ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் 50-ஓவர் உலக கோப்பையில் முழு கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் அதற்கு அடுத்த வருடம் டி20 உலககோப்பை வரவிருக்கிறது. அதற்காக அணியை தயார் செய்ய வேண்டும். இளமையான வீரர்களை கொண்டு எதிர்காலதிற்கு அணியை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் சீனியர் வீரர்கள் விலக்கப்பட்டிருகின்றனர். அவர்களது பணிச்சுமையும் எளிதாக இருக்கும்.” என்றார்.

- Advertisement -