” என்ன நடந்தாலும் சரி.. ஆனால் இதை மட்டும் எப்பவும் செய்யுங்க!” – லெஜன்ட் கும்ப்ளே இந்திய அணிக்கு மெசேஜ்!

0
188
Kumle

நடைபெறுகின்ற உலகக் கோப்பையில் இந்திய அணி அதிக கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடிய அணியாக இருக்கிறது. ஒன்பது லீக் ஆட்டங்களில் இந்திய அணிக்கு எந்த மைதானத்திலும் இரண்டு போட்டிகள் கிடையாது.

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் ஒரு போட்டி முடிந்ததும் அடுத்த போட்டிக்கு பறந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களால் நிலையாக எங்கும் இருந்து நாட்களை கழிக்கவே முடியாது.

- Advertisement -

இதன் காரணமாக வீரர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அவர்களுக்கு தேவைப்படும் ஒரு சிறு ஓய்வை கூட அணி நிர்வாகத்தால் கொடுக்க முடியாது. காயம் அடைந்தவர்களும் இவர்களுடன் சேர்ந்து பயணப்பட வேண்டும்.

இதன் காரணமாகத்தான் சுக்குமன் கில் சென்னையில் இருந்து டெல்லி செல்லாமல், நேராக அகமதாபாத் சென்றார். மேலும் ஒரு போட்டிக்கு நடுவில் ஆரம்பத்தில் குறைந்தது பயணத்தை தவிர்த்து ஒரு நாள்தான் மீதம் இருக்கிறது.

தொடரை நடத்துகின்ற நாடாக இருந்தாலும் இந்திய அணிக்கு இப்படியான சுமைகள் பெரிய அழுத்தத்தை உருவாக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதற்காக இந்திய அணியின் லெஜெண்ட் இந்திய அணிக்கு ஒரு முக்கிய செய்தியை கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கும்ப்ளே கூறும் பொழுது “இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதற்காக நீங்கள் வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டாம். ஒரு போட்டிக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதிலும் ஒருநாள் பயணத்தில் செலவாகிவிடும்.

நீங்கள் இதன் காரணமாக ஒரு அணியாக எப்பொழுதும் ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் வலைப்பயிற்சி செய்தாலும் சரி இல்லை மைதானத்தில் ஜாலியான சில விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் சரி. எப்பொழுதும் மொத்த அணியும் அந்த இடத்தில் இருக்க வேண்டும்.

பும்ரா குஜராத்தில் இருந்து வந்திருக்கிறார். ஹர்திக் மற்றும் ஜடேஜா குஜராத்துக்காக மாநில அணியில் விளையாடவில்லை. ஆனால் இவர்களுக்கு அது சொந்த இடமாகவே தெரியும். எனவே எங்களுக்கு இது ஒரு ஹோம் கேம்.

அங்கு கூடி இருக்கும் 1.30 லட்சம் மக்களில் தமது குடும்பத்தார்களும் இருப்பார்கள் என்கின்ற எண்ணம் இருக்கும். அந்த மக்கள் முன்னிலையில் நடந்து செல்வது ஒரு தனி உணர்வு. மேலும் அதனோடு சேர்த்து அணிக்காக விளையாடுவதும் சிறப்பான உணர்வு. அது நம்மை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!