“யார் என்ன சொன்னாலும் கடைசியில இதுதாங்க முக்கியம்.. இது நல்ல சான்ஸ்!” – என்ன திட்டம் என்று ரோகித் சர்மா அதிரடியான பேச்சு!

0
307
Rohit

இன்று நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி லக்னோ மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் தற்பொழுது போடப்பட்டு இருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது. ஹாரி புரூக் விளையாடும் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்திய அணியும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது. மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என்கின்ற முடிவுக்கு இந்திய அணி செல்லவில்லை.

தற்போதைய லக்னோ ஆடுகளம் சிவப்பு மண்ணால் உருவாக்கப்பட்டது. பொதுவாக சிவப்பு மண் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகம் இருக்கும். எனவே இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என்று சென்று இருக்கிறது.

- Advertisement -

டாஸ் நிகழ்வுக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம். எங்களுக்கு இரண்டாவதாக பேட் செய்ய இந்த தொடரில் நிறைய வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த ஆடுகளம் புதிதாக உருவாக்கப்பட்டது. போட்டி முழுமையாக 100 ஓவர்களுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவது மட்டும்தான். நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடி வந்திருக்கிறோம். கிடைத்திருக்கும் நீண்ட ஓய்வு எப்பொழுதும் சிறப்பானதுதான். மீண்டும் இங்கு வந்து போட்டியில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அதே அணியுடன் விளையாடுகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறும்பொழுது ” இன்று நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். இது ஒரு தைரியமான முடிவு மற்றும் சிறந்த சந்தர்ப்பம். இன்று எங்களுடைய சிறந்ததை கொண்டு வந்து ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய கூட்டத்திற்கு முன்னால் விளையாடுவது நல்ல சந்தர்ப்பம்!” என்று கூறி இருக்கிறார்!