வெளியில் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை ; நான் விளையாடும்போது என் அணி தோற்காது – விராட் கோலி முன்னாள் வீரர்களுக்கு சூசக பதிலடி!

0
323
Viratkohli

நேற்று ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் வாய்ப்புக்கான முக்கியமான போட்டியில் ஹைதராபாதத்தை எதிர்த்து விளையாடிய பெங்களூர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணிக்கு சதம் அடித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விராட் கோலி விளங்கினார். இன்று அவருக்கு ஆறாவது ஐபிஎல் சதம் ஆகும்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்று பேசிய விராட் கோலி “ஹைதராபாத் நல்ல ரண்களை எடுத்திருந்தது. பந்தும் மிகவும் இறுக்கமாக இருந்தது. நாங்கள் ஒரு நல்ல திடமான தொடக்கத்தை பெற விரும்பினோம். ஆனால் 172 ரன்கள் என்கின்ற அளவுக்கு பெரிய தொடக்கத்தை இல்லை.

நானும் பாப்-பும் இந்த சீசனில் சேர்ந்து நன்றாக விளையாடியிருக்கிறோம். என்னுடைய கடந்த இரண்டு கேம்கள் அமைதியாக இருந்தது. வலைகளில் நான் பந்தை அடித்த விதத்தில் நடுநிலை மாறவில்லை.

பேட்டிங்கில் தாக்கத்தை உண்டாக்க விரும்பினேன். பந்துவீச்சாளர்களை எடுத்ததும் பின் தொடர நினைத்தேன். சீசன் முழுவதும் நான் இதை செய்தேன். இதனால் சரிவு ஏற்பட்டது.

- Advertisement -

நான் சரியான நேரத்தில் எனது விளையாட்டை கொண்டு வர விரும்பினேன். ஹைதராபாத்துக்கு எதிராக எங்களுக்கு கடந்த காலங்கள் சரி இல்லை. ஆனால் நான் இதை பார்க்க வேண்டாம் என்று எங்கள் வீரர்களுக்கு சொல்லி இருந்தேன்.

நான் ஒரு ஐபிஎல் வீரராக பார்க்கப்படும் விதம் ஆமாம் அவர் நன்றாக இருக்கிறார் என்பதுதான். நான் மன அழுத்தத்தில் இருந்ததால் எனக்கு நானே சரியான அங்கீகாரத்தை கொடுத்துக் கொள்ள முடியவில்லை.

வெளியில் யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. அது அவர்களுடைய கருத்து. நீங்கள் ஒரு சூழ்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்.

இதை நீண்ட காலமாக செய்துள்ளேன். நான் விளையாடும் பொழுது எனது அணி வெற்றி பெறாது என்கின்ற நிலை இருந்தது கிடையாது. நான் ஃபேன்சி ஷாட்களை விளையாடும் ஒரு பையனாக இருந்தது கிடையாது.

நான் இது சம்பந்தமாக எய்டன் மார்க்ரம் உடன் பேசிக் கொண்டிருந்தேன். இது பேன்சி ஷாட்கள் விளையாடி விக்கெட்டை தூக்கி எறிவது பற்றியது அல்ல. ஐபிஎல் முடிந்து எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரை இருக்கிறது. நான் எனது டெக்னிக்கிற்கு உண்மையாக இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!