கோலி ரோகித் கிடையாது.. இந்த உலக கோப்பையில் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் – கவுதம் கம்பீர் வித்தியாசமான தேர்வு!

0
1049
Gambhir

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்போது மிகவும் சுவாரசியமாக மாற ஆரம்பித்திருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை வெற்றி பெறும் அணி மட்டுமே மிகச் சிறப்பாக, விளையாடி தோல்வி பெறும் அணி மிக சுமாராக விளையாடிய விதத்தில், ஒருதலை பட்சமான போட்டிகளே இருந்து வந்தன.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடி போட்டி கடைசி ஓவர் வரை செல்லும் சிறப்பான போட்டிகள் ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் குயிண்டன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்தரா, ரோகித் சர்மா, எய்டன் மார்க்ரம் ஆகியோர் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவரே நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக வெளிப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதிலிருந்து ஒருவரே அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனுக்கான விருதை வெல்லக்கூடியவராக இருப்பார்.

- Advertisement -

இந்த நிலையில் இதை வைத்து யார் நடப்பு உலக கோப்பையில் சிறந்த பேட்ஸ்மேன்? என்பது குறித்தான விவாதங்கள் சென்று கொண்டிருந்தது. இதற்கு பதில் அளித்து பேசி உள்ள கவுதம் கம்பீர் வித்தியாசமான ஒரு வீரரை சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாம் எப்பொழுதும் புள்ளிவிபரங்களில் வெறித்தனமாக இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை ஹென்றி கிளாஸன்தான் தன்னுடைய பேட்டிங்கில் வெளிப்படுத்திய தாக்கத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். அவர் தன்னுடைய பேட்டிங்கில் எந்தவிதமான ரெக்கார்டுகளையும் தேடவில்லை.

அவர் அணியின் தேவைக்காக விளையாடுகின்ற காரணத்தினால், அதிக ரன் அடித்தவர்களுக்கான பட்டியலில் அவரை உங்களால் பார்க்க முடியாது. ஆனால் அவர் பேட்டிங்கால் உண்டாக்கிய தாக்கத்தில் அவரே இந்த உலகக் கோப்பையில் சிறந்த பேட்ஸ்மேன்!” என்று கூறி இருக்கிறார்!