நோ கோலி பும்ரா.. “உலக கோப்பையை ஜெயிக்க இந்த வீரர் ரொம்ப முக்கியம்” – 29 வயது இந்திய வீரரை பாராட்டிய ரோகித் சர்மா

0
2841

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் அணியை அறிவித்ததோடு செய்தியாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டனர் .

தற்போது இலங்கையில் விளையாடி வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. தற்போது விளையாடி வரும் 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இருந்து உலகக்கோப்பை அணியில் திலக் வர்மா மற்றும் பிரதீஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா இந்திய அணி உலக கோப்பையை வாங்குவதற்கு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் என தெரிவித்தார். ஏனென்றால் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்படக்கூடிய இந்திய வீரர் அவர்தான் எனவும் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டு துறைகளிலும் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை ஹர்திக் பாண்டியா வழங்கி வருவதாக ரோகித் சர்மா கூறியிருக்கிறார். அவரது பந்துவீச்சு தற்போது நன்றாக இருக்கிறது என்று தெரிவித்த அவர் பேட்டிங்கிலும் அணியின் சூழ்நிலை உணர்ந்து மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார் .

இதற்கு உதாரணமாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியை சுற்றி காட்டிய அவர் 66 ரண்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இஷான் கிசான் உடன் இணைந்து அவர் ஆடிய விதம் மிகவும் அருமையாக இருந்தது . அணியின் சூழ்நிலை உணர்ந்து பொறுப்பாக ஆடி இந்திய அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார் . எந்தவித பதற்றமும் இல்லாமல் பொறுப்புணர்வுடன் விளையாடும் ஹர்திக் பாண்டியாவின் பார்ம் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார்.

- Advertisement -

அவரது திறமை மற்றும் பக்குவம் கடந்த காலங்களில் நன்றாக வளர்ந்து இருக்கிறது . இது இந்திய அணிக்கு ஆரோக்கியமான ஒன்று என்று தெரிவித்த ரோகித் சர்மா உலகக்கோப்பை போட்டிகளில் ஆல்ரவுண்டர்களின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார். அதனால் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் இந்தியாவிற்காக சிறப்பாக செயல்படுவது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் .

ஆசிய கோப்பை போட்டிகளில் நேபாளம் அணியை வென்றதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு இந்திய தகுதி பெற்று இருக்கிறது . மேலும் இரண்டாவது சுற்றில் முதல் போட்டியிலும் பாகிஸ்தான் அணியை சந்திக்க இருக்கிறது இந்தியா. ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் உலகக் கோப்பைக்கு முன்பாக விளையாட உள்ளது . அதனைத் தொடர்ந்து அக்டோபர் எட்டாம் தேதி உலக கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சென்னையில் வைத்து சந்திக்க உள்ளது .