“சந்தேகமே கிடையாது.. இந்தப் பையன் முழுசா தயாராகிட்டான்.. விட்றாதிங்க!” – இர்பான் பதான் நம்பிக்கையான கோரிக்கை!

0
389
Irfan

இந்திய இளம் வீரர்கள் கொண்ட டி20 அணி முதல் முறையாக பெரிய நாட்டுக்கு எதிராக இந்தியா தாண்டி இன்று விளையாட இருக்கிறது.

சூரியகுமார் தலைமையிலான இந்திய இளம் டி20 அணி இன்று டர்பன் நகரில் அமைந்துள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது.

- Advertisement -

தற்போது இந்த அணியில் ஜெய்ஸ்வால், ருத்ராஜ், கில், திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் இதே சர்மா என பேட்டிங் யூனிட்டில் நிறைய இளம் வீரர்கள் காணப்படுகிறார்கள்.

பொதுவாக தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்டவை. இங்கு அனுபவம் கொண்ட வீரர்களே திடீரென சென்று விளையாடுவது தடுமாற்றமான ஒன்றாக இருக்கும்.

எனவே இந்த இளம் இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்பது ஒரு சுவாரசியமான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. மேலும் மிகக் குறிப்பாக தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரிங்கு சிங் எப்படி விளையாடுவார் என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இர்ஃபான் பதான் கூறும்பொழுது “ரிங்கு சிங் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பும் என்பதால் அவர் பவுன்ஸ் மற்றும் வேகத்தை ரசிக்கவே செய்வார். அவர் உண்மையில் இதற்கெல்லாம் தயாராக இருக்கும் பையன் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக அவர் இடதுகை வீரராக இருப்பதும் சுதந்திரமாக விளையாட கூடியவராக இருப்பதும் காரணம்.

ரிங்கு சிங் ஒரு சுவாரசியமான வீரர். அவர் உள்நாட்டில் கடினமான எல்லாவற்றையும் கடந்து ஐபிஎல் தொடரில் இருந்து நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்றால், அவருக்கு நிறைய அனுபவம் கிடைத்து இருக்கிறது என்று அர்த்தம். அவர் தனக்கான வாய்ப்புகளை இரண்டு கைகளாலும் எடுத்துக் கொள்வார்.

ரிங்கு சிங் உள்நாட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதை மறந்து விட வேண்டாம். அவருடைய பெயர் கடந்த சில மாதங்களாக எல்லா பக்கமும் சுற்றி வருகிறது. அவருக்கு எல்லா பக்கத்தில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அவர் எப்போதும் முயற்சி செய்யக் கூடியவராக இருக்கிறார். அவருக்கு ஐபிஎல் தொடரில் வந்ததும் இடம் கிடைத்துவிடவில்லை. அவர் முதலில் வெறும் பீல்டராக மட்டுமே இருந்தார். பின்னர் அவரை அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்து, மேலே வர விரும்பியது. இப்போது அதற்காக அவர்கள் நல்ல முடிவுகளை பெறுகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!