“சந்தேகமே கிடையாதுங்க.. இந்தியாவுக்குதான் வாய்ப்பு அதிகம்.. வரலாறு அததான் சொல்லுது!”- பட்லர் ஓபன் டாக்!

0
1049
Butler

இங்கிலாந்து கிரிக்கெட் சில ஆண்டுகளாக பெற்றிருக்கும் எழுச்சி என்பது, உலக கிரிக்கெட் நாடுகளை இங்கிலாந்து செயல்முறையின் பக்கமாக பெரிய அளவில் ஈர்த்து இருக்கிறது!

2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்து படுதோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

இதன்பிறகு 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கின்ற நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி மிகக் கடுமையாக இங்கிலாந்து உழைத்தது.

அவர்களின் தொலைநோக்கான உழைப்பிற்கு பலனாக அந்த வருடம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று தற்போது நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகச் சாம்பியன் ஆக இருப்பதோடு, டி20 சாம்பியன் ஆகவும் இருக்கிறது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு உலகக் கோப்பையை வெல்லவில்லை என்கின்ற குறையை நீக்க அவர்களுக்கு இத்தனை வருடங்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கான அதிக வாய்ப்பு இருக்கும் அணியாக இங்கிலாந்து இந்திய அணி உடன் இணைத்து பார்க்கப்படுகிறது. அவர்களின் பேட்டிங் வரிசையின் நீளம் 11 வரை இருக்கிறது. எல்லா இடங்களையும் அவர்கள் டிக் செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் உலகக் கோப்பை வாய்ப்பு குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் “தெளிவான பேவரைட் ஆக இந்தியாதான் இருக்கிறது. கடந்த சில உலகக் கோப்பைகளை நீங்கள் பார்க்க வேண்டும். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. போலவே ஆஸ்திரேலியா இங்கிலாந்து நாட்டில் நடந்த உலகைக் கோப்பைகளை அந்தந்த அணி கைப்பற்றியது.

சொந்த நாடாக இருப்பது சாதகமான ஒரு விஷயமாக இருந்து வருவது கடந்த கால வரலாற்றின் மூலமாகத் தெளிவாகிறது. சொந்த சூழ்நிலையில் இந்தியா மிகச் சிறந்த அணி. நான் நிச்சயம் அவர்களையே ஃபேவரைட் ஆக பார்க்கிறேன்.

நாங்கள் உலக கோப்பையை வெல்ல வெளியே செல்கிறோம். எங்களை நாங்கள் நடப்புச் சாம்பியன் ஆக பார்க்கவில்லை. இது மிகவும் புதிய ஒரு தொடர். இந்த தொடரில் சிறந்த அணிகள் இருப்பதால் நிச்சயம் சவாலான ஒன்றாக இருக்கும்.

நாங்கள் நல்ல ஒரு அணி. ஆபத்தான அணி என்றும் எங்களுக்கு தெரியும். எங்கள் அணியில் நிறைய அனுபவம் இருக்கிறது. நாங்கள் எங்களை நம்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!