“சந்தேகமே வேண்டாம்.. தோனிக்கு அடுத்து இவர்தான் சிஎஸ்கே கேப்டன்!” – அம்பதி ராயுடு அதிரடி!

0
2630
Ambati

நவீன கிரிக்கெட்டின் வளர்ச்சியில் டி20 கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. டி20 கிரிக்கெட் வருகைக்கு பிறகு தான் கிரிக்கெட் இதுவரை செல்லாத நாடுகளுக்கு எல்லாம் சென்று இருக்கிறது.

மேலும் டி20 கிரிக்கெட் வருகைக்குப் பின்னால் கிரிக்கெட் வாரியங்கள் தனிப்பட்ட முறையில் கிளப் கிரிக்கெட்டை அதிகரித்திருக்கின்றன. இங்கிலாந்தில் ஆரம்பித்து இந்தியா என்று வந்து தற்பொழுது டி10 முறையில் ஜிம்பாப்வே நாட்டிலும் தனிப்பட்ட தொடர்கள் நடக்கின்றன.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சியின் காரணமாக, கிரிக்கெட்டை தொழிலாகக் கொண்ட இளைஞர்கள் எல்லோருக்குமான வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. யாரும் கிரிக்கெட்டை தொழிலாக தேர்ந்தெடுத்ததற்கு வருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் முன்பு இதுபோல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கத்தில் கிரிக்கெட் உலகம் தழுவி பெரிய விளையாட்டாக மாறி வருகிறது. இதன் காரணமாக டி20 கிரிக்கெட் வடிவத்தை அடுத்த ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் டி20 தொடர்களில் இந்தியாவில் 16 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர்தான் உலகில் முதல் நிலையில் இருந்து வருகிறது. வீரர்களுக்கு சம்பளம், பாதுகாப்பு, பயிற்சி வசதி மற்றும் போட்டிகளின் தரம், ஏற்பாடு என்று ஐபிஎல் பக்கத்தில் நெருங்க வேறு எந்த தொடர்களும் கிடையாது. அதாவது ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்கள் கூட கிடையாது.

- Advertisement -

இப்படியான மிகச் சிறப்பான வெற்றி பெற்ற ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய வெற்றிகரமான அணியாக முதல் இடத்தில் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பொதுவாக தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை லட்சியமாகக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி வருகின்ற கிரிக்கெட் வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பதை கனவாகவே கருதுகிறார்கள். ஏனென்றால் அணியின் உள் சூழல் அவ்வளவு அழகான ஒன்று, மேலும் வீரர்களுக்கு தனிப்பட்ட அழுத்தம் நெருக்கடிகள் குறைவு.

ஐபிஎல் தொடரில் இப்படி வெற்றிகரமான அணியாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ஒருவர் வருவது என்பது மிகப்பெரிய விஷயம். அது எல்லோருக்கும் கிடைக்க கூடியது கிடையாது.

தற்பொழுது தோனிக்கு பிறகு அடுத்த கேப்டன் சிஎஸ்கேவுக்கு யார் என்று பேசிய அம்பதி ராயுடு கூறும் பொழுது “சரியாகப் பார்த்தால் அடுத்த கேப்டன் ருதுராஜ்தான் என்று நினைக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறி இருக்கிறார்!