“தோனி கிடையாது.. என்னுடைய சிறந்த கேப்டன் இவர்தான்!” – ஸ்ரீசாந்த் அதிரடியான கருத்து!

0
396
Dhoni

தற்பொழுது இந்தியாவில் உலகக்கோப்பை குறித்த எதிர்பார்ப்பு மிக அதிகமான அளவில் இருக்கிறது. ஏனென்றால் உலகக்கோப்பை இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது.

உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகி இருக்கும் விதம் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது. இந்திய அணி ஆசியக் கோப்பை வென்ற விதத்தில் மிகவும் நம்பிக்கையாக காணப்படுகிறது.

- Advertisement -

மேலும் உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத இருக்கிறது.

இந்தத் தொடரிலும் இந்திய அணி நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கான பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக ஒரு வலுவான அணியைக் கட்டமைப்பதற்காக, கடைசி நேரத்திலும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை எடுத்துக்கொண்டால் தென்னாப்பிரிக்க அணியிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்திருக்கிறது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்கள் அதிகம் இடம் பெறவில்லை.

- Advertisement -

எனவே தற்பொழுது உலக கோப்பைக்கு நல்ல நம்பிக்கையுடன் செல்வதற்காக, தங்களது வலுவான அணியை கொண்டு களம் இறங்கி இந்திய அணியை வீழ்த்த முயற்சி செய்வார்கள் என்பது உறுதி.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீஷாந்த் கூறும் பொழுது “நான் விளையாடியதில் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி என்று சொல்வது வெகு எளிதானது. ஏனென்றால் நான் அவருக்கு கீழ் விளையாடி இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் இடம் பெற்று இருக்கிறேன்.

- Advertisement -

ஆனால் என்னை பொருத்தவரை எனக்கு சிறந்த கேப்டன் ராகுல் டிராவிட். ஏனென்றால் அவர் தேர்வாளர்களிடம் தனக்கு புதிய பந்துவீச்சாளர் தேவை கிடையாது, அனுபவமுள்ள பழைய பந்துவீச்சாளர்களை கொடுங்கள் என்று வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை ஆதரித்தார்.

கேஎல்.ராகுல் போன்றவர்களை தொடர்ந்து விளையாடி அவர்களது நிலைத்தன்மையை பராமரிக்க செய்ய வேண்டியது அவசியமாகும். ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் இந்தியாவை வெல்வது சுலபம் கிடையாது என்பதை காட்ட வேண்டும். அவர்களை மனம் சோர்வடையச் செய்ய நாம் தோற்காமல் இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!