“ரிங்கு சிங்கை எந்த பவுலராலும் தடுக்க முடியாது.. காரணம் இதுதான்!” – கவாஸ்கர் கொடுத்த விளக்கம்!

0
378
Gavaskar

நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட, இந்திய அணிக்கு இந்த போட்டி நல்ல நம்பிக்கையை தரக்கூடிய போட்டியாக மாறி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார்கள். ஆனாலும் இந்திய அணி குறிப்பிட்ட அந்த மைதானத்தில் தேவைக்கு அதிகமாகவே ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

அதே சமயத்தில் விக்கெட் விழுந்ததைப் பற்றி கவலைப்படாமல் பவர் பிளேவில் ரன்கள் எடுப்பதை பற்றி மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் நினைத்தார்கள். திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அச்சமின்றி பவர் பிளேவில் விளையாடினார்கள்.

இதற்கு அடுத்து திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் ஆட்டமிழந்துவிட்ட பிறகு, பந்தை காற்றில் அடிக்காமல் தரையிலேயே அதிரடியாக புத்திசாலித்தனமாக விளையாடி, ரிங்கு சிங் 30 பந்துகளில் தனது முதல் சர்வதேச அரை சதத்தை அடித்தார். இந்த அரை சதத்தில் ஒன்பது பவுண்டரிகள் அடக்கம்.

மேலும் கடைசி இரண்டு ஓவர்கள் இருந்த பொழுது உடனடியாக அதிரடிக்கு மாறி தென் ஆப்ரிக்க கேப்டன் மாத்திரம் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார். நேற்று அவர் 39 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ரிங்கு சிங் குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “நாம் பார்ப்பது போலவே அவர் விளையாடுவதற்கு உள்ளே செல்லும் பொழுது மிகவும் நன்றாக இருக்கிறார். அவருக்கு இந்த முறை கிடைத்தது போல் நீண்ட நேரம் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பலமுறை கிடைப்பது கிடையாது. ஆனால் கிடைத்த இந்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் மிகவும் நல்ல பையன்.

அவரிடம் எல்லா விதமான ஷாட்களும் இருக்கிறது. முன் காலில் மற்றும் பின் காலில் அடிக்கிறார். பந்தை நன்றாக தூக்கியும் அடிக்கிறார். மைதானத்தில் இரண்டு பக்கங்களிலும் அடிக்கிறார். இப்படி அவருடைய கிரிக்கெட் புத்தகத்தில் எல்லா விதமான ஷாட்களையும் வைத்திருக்கிறார்.

அவர் விளையாடுவதற்கு மைதானத்திற்குள் சென்ற பிறகு, அவர் ரன் அடிப்பதை எந்த பந்துவீச்சாளராலும் தடுக்க முடியாது. இப்பொழுது அவர் தனது முதல் சர்வதேச அரைசதத்தை பெற்று இருப்பது அவருடைய தன்னம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும்!” என்று கூறியிருக்கிறார்!