“அஷ்வின் வேண்டாம்.. வீணா எதிர் டீம் கையில சிக்கிடுவிங்க.. காரணம் இதுதான்!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடியான விளக்கம்!

0
792
Ashwin

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மிக முக்கியமான போட்டியில் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் லக்னோ மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்தப் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா வரமாட்டார் என்பது உறுதியாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தைப் போலவே அவரது இடத்தில் சூரிய குமார் யாதவ் விளையாடுவார்.

- Advertisement -

தற்பொழுது லக்னோவில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உடன் இந்திய அணி களம் இறங்க வேண்டும் என்று வெளியில் இருந்து நிறைய கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

லக்னோ ஆடுகளத்தில் பந்து திரும்பும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறும் பொழுது சிராஜிக்கு ஓய்வு கொடுத்து சமி விளையாட வேண்டும் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணிகள் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “இங்கிலாந்துடன் விளையாடுவதால் ஒரு ஆப் ஸ்பின்னரை விளையாடுவோம் என்று சொல்கிறீர்கள். லக்னோ மைதானம் பெரிது என்பதால் ஒரு ஆப் ஸ்பின்னரை விளையாடுவோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஐபிஎல் இல் பார்த்த விக்கெட் என்று நினைத்து சுழற் பந்துவீச்சாளர் உடன் செல்ல நினைக்கிறீர்கள். ஆனால் இது ஐபிஎல் தொடரில் பார்த்த ஆடுகளம் கிடையாது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் இருந்தது கருப்பு மண் ஆடுகளம். தற்பொழுது இருப்பது வேகமும் பவுன்சும் கொண்ட சிவப்பு மண் ஆடுகளம். இது மட்டுமில்லாமல் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வருகிறது. இப்படியான நிலையில் நீங்கள் இரண்டாவது கட்டத்தில் பந்து வீச வேண்டியது இருந்தால், நீங்கள் மூன்று சுழற் பந்துவீச்சாளர் உடன் சென்றால், நீங்கள் எதிரணியின் கைகளுக்குள் சிக்கி கொள்வீர்கள்.

முதலில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் பனிப்பொழிவு பிரச்சனை எப்பொழுதும் இங்கு இருந்து வருகிறது. மேலும் கருப்பு மண் ஆடுகளத்தில் இதுவரை இங்கு விளையாடவில்லை.ஒருவேளை அஸ்வின் விளையாடினால், சிராஜ் இடத்தில் சமி விளையாட வேண்டும்.

சிராஜ் இதுவரை இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக பந்து வீசி வந்திருக்கிறார். ஆனால் தற்பொழுது முகமது சமி ஐந்து விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருக்கிறார். எனவே பவுலிங் ஃபார்மை மனதில் வைத்து சமிக்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!