“NO.1 நோ யூஸ்.. ரோகித்கிட்ட இருந்து பாபர் அசாம் கத்துக்கனும்!” – அப்துல் ரசாக் அழுத்தமான வலியுறுத்தல்!

0
5397
Rohit

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13 வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், அரையிறுதிக்கான நான்கு இடங்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிரியர் என மூன்று அணிகள் தங்கள் இடங்களை உறுதி செய்து இருக்கிறது.

அதே சமயத்தில் நான்காவது இடத்திற்குதான் தற்பொழுது போட்டி நிலவி வருகிறது. நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

- Advertisement -

இதில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதம் உள்ள நிலையில் 8 புள்ளிகள் எடுத்து இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிதான் முன்னணியில் இருக்கிறது. ஆனாலும் அந்த அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை எதிர்கொள்வதுதான் சிக்கலாக அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் நியூசிலாந்து தனது கடைசி ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. 8 புள்ளிகள் எடுத்து இருக்கும் நியூசிலாந்து அணி இலங்கை அணியை வென்றால், பாகிஸ்தான் தன்னுடைய கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையறுதிக்கு முன்னேற முடியும். இல்லையென்றால் நியூசிலாந்து தோல்வி அடைந்து பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.

தற்பொழுது பாகிஸ்தானின் இந்த நிலை குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கூறும் பொழுது “நம்பர் ஒன் பகார் ஜமான்தான். எல்லா நியூசிலாந்து வீரர்களும் அவரை புகழ்ந்தார்கள். இப்படி விளையாடுவதற்கான கிளாஸ் எங்கள் கேப்டன் பாபர் அசாமுக்கு கிடையாது.

- Advertisement -

அதே ரோகித் சர்மாவை பாருங்கள் அவர் முதல் ஓவரில் பத்து ரன்களும் இரண்டாவது ஓவரில் 15 ரன்கள் எடுக்க தயாராக இருக்கிறார். பாபர் வித்தியாசமான விளையாட்டு பாணியை கொண்டவர் என்றாலும் கூட ரோஹித் சர்மாவை அவர் பார்க்க வேண்டும்.

உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை எடுத்துச் செல்கிறார்கள். எங்கள் காலத்தில் மேத்யூ கைடன், சனத் ஜெயசூர்யா, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் அப்படியானவர்களாக இருந்தார்கள்.

இந்திய வீரர்களை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் தேசத்திற்காக விளையாடுகிறார்கள். மற்ற வீரர்கள் ரன்கள் எடுக்கும் பொழுது விராட் கோலி தான் இரண்டு எடுத்தது போல மகிழ்ச்சி அடைகிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தார்கள். அதனால் வெற்றிகள் வந்தது. தற்பொழுது அப்படி இல்லை. இதனால் நாம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கேள்வி கேட்கிறோம். இது கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். அதே சமயத்தில் ரோஹித் சர்மாவின் அணி ஒற்றுமையாகவும், நம்பிக்கையாகவும் இருப்பதற்கு அவர்களுக்கான பாராட்டை கொடுக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!