இந்திய அணிக்கு புதிதாக கிடைத்திருக்கும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியின் கிரிக்கெட் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்தோம் என அவரது தந்தை முட்யலா கூறியிருக்கிறார்.
பங்களாதேஷனுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெறும் 34 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அனைவரது கவனத்தையும் நிதிஷ் குமார் கவர்ந்திருக்கிறார். அதே சமயத்தில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மணிக்கு 137 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இரண்டு விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்.
பெரியவர்களுடன்தான் விளையாடுவார்
நிதிஷ் குமாரை உருவாக்கியது பற்றி அவரது தந்தை கூறும் பொழுது “அவர் எப்பொழுதும் தன்னைவிட வயதில் மூத்த அணிவுடன்தான் எப்பொழுதும் விளையாடுவார். அவர்களுடனே அதிகம் விளையாடியதால், அவர்களின் விளையாட்டு மற்றும் உணவு பழக்க வழக்கங்களை தொடர்ந்து கவனித்து வந்தார். மேலும் எப்போதும் ஹர்திக் பாண்டியாவிடம் ஆலோசனை பெறுவார். தற்போது நிதிஷ் பின்பற்றும் டயட் ஹர்திக் பாண்டியா கூறியதுதான். அதைத்தான் பின்பற்றி வருகிறார்”
“விசாகப்பட்டினத்தில் இருந்து எனக்கு உதய்பூருக்கு வேலை மாற்றம் வந்தது. எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தினால் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்தேன். அப்பொழுது நிதிஷ் குமார் மாநில கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலும் கூட, மாவட்ட கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுவதாகவும் அவரை தயார்படுத்த வேண்டும் என்றும் பயிற்சியாளர்கள் சொன்னார்கள். இதன் காரணமாக நான் எனது வேலையை விட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைக்க ஆரம்பித்தேன்” என்று கூறி இருக்கிறார்.
இந்த விஷயத்தில் தயார்படுத்தினோம்
நிதிஷ் குமார் உடைய இளம் வயது பயிற்சியாளர் நிர்மல் கூறும் பொழுது “அவருக்கு இளம் வயதிலேயே நல்ல திறமையும் பவரும் இருந்தது. இந்த நாங்கள் அவருடைய பேட்டிங்கின் டவுன் ஸ்விங்கில் அதிகம் உழைத்தோம். இது பந்தை சிக்சர் அடிப்பதற்கு உதவும். இதில் நாம் விரும்பும் தூரத்திற்கு எவ்வளவு சக்தியை கொடுத்து அடிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்”
இதையும் படிங்க : நியூசி டெஸ்ட்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் துணை கேப்டன்.. இளம் வீரர் நீக்கம் – முக்கிய மாற்றங்கள்
“அவர் தன்னுடைய ஆரம்ப நாட்களில் இருந்தே காலிஸ் போல மிகவும் வேகமாக பந்து வீச விரும்பினார். சர்வதேச கிரிக்கெட்டில் காலிஸ் எந்த வகையான வீரராக இருந்தாரோ, அதே வகையான திறமைகள் தற்பொழுது நிதிஷ் குமாரிடமும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






