இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து வீரர் ஒருவரை விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது போட்டியில் லண்டனில் விளையாடி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் திரும்பி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், தனது யூ ட்யூப் சேனலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்சை விமர்சனம் செய்திருக்கிறார். இங்கிலாந்து அணியில் பெரிய பேட்ஸ்மேனாக ஸ்டோக்ஸ் பார்க்கப்படும் வேளையில் அது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
வேறு என்ன சாதித்தார்
அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைவது உறுதி என்று இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி 135 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் வெறும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். அந்த ஒரு இன்னிங்ஸ் தவிர ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக வேறு என்ன சாதித்தார் என அஸ்வின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க:400 ரன் சாதனை.. இன்னொரு தடவை நீங்க இந்த மாதிரி செய்யவே கூடாது.. முல்டரிடம் வருந்திய ஜாம்பவான் லாரா
இதுகுறித்து அஸ்வின் கூறும்போது “பென் ஸ்டோக்ஸ் ஒரு அற்புதமான வீரர், நான் அவரை பாராட்டுகிறேன். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வீர தீர செயல்களைத் தவிர ஒரு பேட்ஸ்மேனாக அவர் என்ன சாதித்தார்? என்பதுதான் என்னுடைய கேள்வி” என அஸ்வின் கூறியிருக்கிறார். அஸ்வின் கூறியதைப் போன்று அந்த குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ் தவிர ஸ்டோக்ஸ் ஒரு பேட்ஸ்மேன் ஆக பெரிய அளவில் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.






