நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான பேட்டிங் யூனிட்டை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இருந்த ஒரு முக்கிய பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது தலைமையிலான இந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டிராவீஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த அணியில் மிடில் ஓவர்களில் வெளுத்துக்கட்டும் ஹென்றி கிளாசன் இருக்கிறார்.
இப்படியான நிலையில் அவர்களுக்கு பிரச்சனையாக மூன்றாவது வீரராக யார் களமிறங்குவது என்பது தான் இருந்து வந்தது. தற்போது இந்த இடத்திற்கு அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் இசான் கிஷானை வாங்கி விட்டார்கள். இவரை மற்ற அணிகள் ஏலத்தில் வெகு எளிதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விட்டுக் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு யாரும் எதிர் பார்க்காத வகையில் ஆந்திராவின் ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மிகச்சிறப்பாக ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக செயல்பட்டிருந்தார். அவர் பதினைந்து போட்டிகளில் 2 அரை சதங்களுடன் 303 ரன்கள் குவித்தார். மேலும் மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றியிருந்தார். இவரை இந்த ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு அந்த அணி தக்கவைத்தும் இருந்தது.
இதையும் படிங்க : சிஎஸ்கே மும்பை கிரிக்கெட்.. தயவுசெய்து இந்த டீம் ஐபிஎல் கோப்பையை ஜெயிங்க – ஹர்பஜன் சிங் உணர்ச்சிவசம்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 என்பது காயத்தின் காரணமாக ரூல்டு அவுட் ஆனார். இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில் அவர் காயத்தில் இருந்து குணம் அடைந்து விட்டதாகவும், தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைகிறார் என்றும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகவும் வலிமையாக தெரிகிறது!