இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமான இந்திய வீரர் நிதிஷ்குமார் ரெட்டி தான் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது தன்னுடைய கனவு இன்னிங்ஸ் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இன்று வேகப் பந்துவீச்சாளர் மற்றும் மிதவேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் அறிமுகமானார்கள். மேலும் இருவருமே முதல் போட்டியில் தங்களுடைய முத்திரையை பதித்திருக்கிறார்கள்.
இந்திய அணிக்கு அதிக ரன்
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில் அறிமுக வீரராக களம் இறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி இந்த போட்டியில் இந்திய அணிக்கு அதிகபட்ச ரன் எடுத்தார். அவர் மொத்தம் 59 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 41 ரன்கள் எடுத்தார்.
தன்னுடைய முதல் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தது குறிப்பாக பேட்டிங் செய்வதற்கு சவாலான சூழ்நிலையில் எடுத்தது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இன்று அவர் பந்துவீச்சுக்கு வராத அளவுக்கு மற்றவர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்ததால் வந்து வீசவில்லை.
என்னுடைய கனவு இன்னிங்ஸ் இல்லை
இந்த போட்டி குறித்து பேசி இருக்கும் நிதீஷ்குமார் ரெட்டி கூறும் பொழுது “நானும் ஹர்ஷித் ராணாவும் இந்த போட்டிக்கு ஒருநாள் முன்பாகத்தான் எங்களுடைய அறிமுகம் பற்றி தெரிந்து கொண்டோம். ஆனால் நாங்கள் இது குறித்து பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கினோம். பிறகு இருவரும் சேர்ந்து ஒரு சைக்கிள் சவாரி சென்றோம். நாங்கள் ரிலாக்ஸ் ஆகவே இருந்தோம்”
“இன்று எனக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் நிச்சயமாக இது எனக்கு கனவு இன்னிங்ஸ் கிடையாது.இது ஒரு நல்ல விதமான தொடக்கம் அவ்வளவுதான். இந்தியாவை ஒப்பிடும் பொழுது இங்கு விக்கெட்டில் பவுன்ஸ் அதிகம் இருக்கிறது. அது இங்குள்ள மெல்போன் மைதானத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. மற்றபடி பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது”
இதையும் படிங்க : எங்க பவுலர் கிட்ட விராட் கோலி வித்தை பலிக்கல.. காரணம் அவர் இந்த தப்பு செஞ்சார் – மேத்யூ ஹைடன் விளக்கம்
“இந்திய அணிக்காக அறிமுகமானது எனக்கு சிறந்த உணர்வு. நான் விளையாடும் ஆரம்பம் காலம் முதல் இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன். நான் விளையாடி வந்த காலத்தில் எனக்கு ஐடியலாக விராட் கோலி இருந்தார். இன்று அவர் கையாலே எனது அறிமுக தொப்பியை வாங்கியது வாழ்நாளில் மறக்க முடியாததாக” அமைந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.