எங்க பவுலர் கிட்ட விராட் கோலி வித்தை பலிக்கல.. காரணம் அவர் இந்த தப்பு செஞ்சார் – மேத்யூ ஹைடன் விளக்கம்

0
512
Hayden

விராட் கோலியின் பேட்டிங் நுட்பம் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களிடம் எடுபடவில்லை என்றும், அவர் தன்னுடைய பேட்டிங் திட்டத்தில் ஒரு தவறை செய்துவிட்டார் எனவும் மேத்யூ ஹைடன் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 12 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டும் எடுத்து, ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இன்று அவர் ஒரு புதிய பேட்டிங் திட்டத்துடன் வந்து அதை செயல்படுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

விராட் கோலியின் பேட்டிங் திட்டம்

பொதுவாக விராட் கோலிக்கு பந்தை வெளியில் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து வீசி இழுப்பார்கள். இதன் காரணமாக விராட் கோலி அப்படியான பந்துகளை தன் உடலுக்கு அருகில் வைத்துக் கொள்வதற்காக ஆப் ஸ்டெம்புக்கு நகர்ந்து சென்று விளையாடும் திட்டத்தை கொண்டு வந்தார்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரே லென்த்தில் பந்துவீசி செட்டில் ஆவதை தடுப்பதற்காக அவர் கிரீசில் இருந்து கொஞ்சம் முன்னே வந்து நின்று விளையாடினார். உடலுக்கு அருகே பந்து இருப்பதாலும், மேலும் பந்துவீச்சாளர்களின் லென்த்தை உடைப்பதாலும் ரன்களும் விரைவாக எடுக்க முடியும் என்பதால் விராட் கோலி இப்படியான திட்டத்தோடு இன்று வந்தார். ஆனால் விராட் கோலிக்கு கொஞ்சம் ஷார்ட் லென்த்தாக பந்து வீச ஆரம்பித்ததும், அதை விட்டு விளையாடாமல் தொட்டு கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

விராட் கோலி செய்த தவறு இதுதான்

இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “வெளியில் வீசும் பந்துக்காக அவர் ஆப் ஸ்டெம்ப் வந்து விளையாட முடிவு செய்தார். ஆனால் இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் நீங்கள் இப்படி வந்து விளையாடினாலும் கூட, அந்த இடத்திலிருந்து விளையாட முடியாத பந்தை விட்டு விளையாடுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் பந்துக்கு நெருக்கமாக வந்து விளையாடுவதால் ஒவ்வொரு பந்தையும் விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு வந்து விடுகிறீர்கள்”

இதையும் படிங்க : இந்திய அணி பேட்டிங்கில் செய்த தவறு இதுதான்.. உடனடியாக மாறி இதை செய்ய வேண்டும் – புஜாரா விமர்சனம்

“நீங்கள் பந்தை எவ்வளவு அடித்தீர்கள் என்பதும் எவ்வளவு சிறப்பாக பந்துவீசினார்கள் என்பதும் முக்கியம் கிடையாது. எப்படி பந்தை மிடில் செய்து விளையாடினிர்கள் என்பது முக்கியம். நிதீஷ்குமார் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விளையாடும்போது வந்து பேட்டுக்கு நன்றாக வந்து அவர்கள் சரியாக விளையாடினார்கள். விளையாடுவதற்கு உத்திகள் இருக்கிறது. அதை நான் விரும்புகிறேன் விமர்சிக்க செய்யவில்லை. ஆனால் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு பந்தையும் அடிக்க நினைத்தால் விளையாட முடியாது”என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -