2 ரன்.. கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நைஜீரியா.. நியூசிலாந்து அணி எதிர்பாராத தோல்வி.. U19 மகளிர் டி20 உலக கோப்பை

0
5463

மலேசியாவில் அண்டர் 19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதி விளையாடினர்.

இதில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட நைஜீரியா அணி வெறும் இரண்டு ரன்னில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்தது.

- Advertisement -

அண்டர் 19 மகளிர் உலகக் கோப்பை

மலேசியாவில் அண்டர் 19 மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் 11வது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதி விளையாடின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மழையின் காரணமாக போட்டி 13 ஓவராக மாற்றப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் லுக்கி பிட்டி 25 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து நைஜீரியா அணியின் மிடில் வரிசை வீராங்கனை லில்லியன் உதே 22 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 18 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் அனிகா தபேர் 3 ஓவர்களில் 6 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

- Advertisement -

அசத்தல் வெற்றி பெற்ற நைஜீரியா மகளிர் அணி

நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் அதிவேகமாக ஆட்டம் இழக்க மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய வொல்லாண்ட் மற்றும் டோட் 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இருந்த நிலையில் வொல்லான்ட் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் கேப்டன் வேக்லின் டோட் உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வர இறுதியாக நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

இதையும் படிங்க:இங்கிலாந்து டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய 2 மாற்றங்கள்.. சாம்சனுக்கு புதிய நெருக்கடி

இதில் 13வது ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வேக்லின் மூன்றாவது ரன் எடுக்க முயற்சித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழக்க வெறும் 2 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி நைஜீரிய அணியிடம் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது. மேலும் கற்றுக் குட்டி அணியான நைஜீரிய அணிக்கு இது வரலாற்று வெற்றுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -