சர்வதேச டி 20 கிரிக்கெட்.. சூரியகுமார் யாதவை தாண்டி.. நிக்கோலஸ் பூரன் மாஸ் ரெக்கார்டு

0
203
Pooran

தற்போது தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது.

இதில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

அதி முக்கியமான டி20 தொடர்

சில மாதங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிதிக்கு தகுதி பெற மிக முக்கியமான கால் இறுதி போலான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் மோதியது. அந்த போட்டிக்கு முன்பு வரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து தோற்று வந்த தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்தது.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. எனவே அதற்கு கொஞ்சமாவது பதிலடி தருவதற்கு டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்ற வேண்டிய அவசியம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இருந்தது.

- Advertisement -

நிக்கோலஸ் பூரன் அதிரடி சாதனை

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் இளம் வீரர் டிரிஸ்டின் ஸ்டப்ஸ் 42 பந்துகளில் அதிரடியாக 76 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அலிக் ஆதனஸ் 30 பந்தில் 40 ரன், ஷாய் ஹோப் 36 பந்தில் 56 ரன்கள் எடுத்து மிக வலிமையான துவக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் வெறும் 26 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சூரியகுமார் யாதவை தாண்டி மூன்றாவது இடம் பிடித்தார்.

இதையும் படிங்க : சங்கக்காரா என்னை இத சொல்லி ஸ்லெட்ஜிங் பண்ணுவாரு.. அப்போ இருந்த இலங்கையே வேற – நாசர் ஹுசைன் பேட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் ஐந்து வீரர்கள்:

ரோகித் சர்மா – 159 டி20 போட்டிகள் – 205 சிக்ஸர்கள்
மார்ட்டின் கப்டில் – 122 டி20 போட்டிகள் – 173 சிக்சர்கள்
நிக்கோலஸ் பூரன் – 96 டி20 போட்டிகள் – 139 சிக்ஸர்கள்
ஜோஸ் பட்லர் – 124 டி20 போட்டிகள் – 137 சிக்சர்கள்
சூர்யகுமார் யாதவ் – 71 டி20 போட்டிகள் – 136 சிக்ஸர்கள்

- Advertisement -