உலக டி20 கிரிக்கெட்டில் மிகவும் தாக்கம் கொடுக்கக்கூடிய பேட்ஸ்மேனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் உருவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட்டில் முகமது ரிஸ்வானின் பெரிய சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.
உலகெங்கும் நடக்கும் டி20 கிரிக்கெட்டில் பரவலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடுகிறார்கள். டி20 கிரிக்கெட் டீம் முதல் அடையாளமாகவே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய அதிரடியான ஆட்டம் முறையின் காரணமாக டி20 கிரிக்கெட் லீக்குகளில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.
கெயிலின் உலக சாதனை முறியடிப்பு
சில நாட்களுக்கு முன்பாக நிக்கோலஸ் பூரன் ஒரு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த கிறிஸ் கெயில் உலகச் சாதனையை முறியடித்தார். கெயில் 2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் 135 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் 2024 ஆம் ஆண்டு இந்த அறிய உலகச் சாதனையை மிக அனாயசமாக முறியடித்தார். அவர் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 153 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இன்னும் இந்த வருட கிரிக்கெட் காலண்டரில் நாட்கள் இருக்கிறது என்பதால் இந்த சிக்ஸர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முகமது ரிஸ்வானின் உலகச் சாதனை முறியடிப்பு
இந்த நிலையில் பாகிஸ்தான் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஒரு வருடத்தில் ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவராக உலகச் சாதனை படைத்திருந்தார். இந்த சாதனை முறியடிக்கப்படுவதற்கு மிகவும் கடினமாகவவே சாதனையாகவே கருதப்பட்டு வந்தது.
இப்படியான சூழலில் தற்போது கரீபியன் பிரிமியர் லீக்கில் விளையாடி வரும் நிக்கோலஸ் பூரன் இந்தத் தொடரில் முகமது ரிஸ்வானின் ஒரு வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து இருந்த உலகச் சாதனையையும் முறியடித்தார். ஆனாலும் ரிஸ்வானை விட பூரனுக்கு 18 போட்டிகள் அதிகம் தேவைப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : ஹர்திக் சிவப்பு பந்தில் பயிற்சி செய்தது ஏன் தெரியுமா?.. அவர் டெஸ்ட் ஆட மாட்டார் – பார்த்திவ் படேல் உறுதி
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் :
நிக்கோலஸ் பூரன் -2059 ரன்கள் – 66 போட்டிகள் – 2024
முகமது ரிஸ்வான் – 2036 ரன்கள் – 48 போட்டிகள் – 2021
அலெக்ஸ் ஹேல்ஸ் – 1946 ரன்கள் – 61 போட்டிகள் – 2022
ஜோஸ் பட்லர் – 1833 ரன்கள் – 56 ரன்கள் – 2023
முகமது ரிஸ்வான் – 1817 ரன்கள் – 44 போட்டிகள் – 2022