வெஸ்ட் இண்டிஸை சேர்ந்த 28 வயது இளம் இடதுகை பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் டி20 கிரிக்கெட் சத்தமில்லாமல் பெரிய ஆதிக்கத்தை செலுத்தி கொண்டு வருகிறார். இந்த வகையில் சக கரிபியன் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் உடைய முக்கிய சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார்.
தற்போது இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரிமியர் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக நிக்கோலஸ் போறன் விளையாடுகிறார். இந்த நிலையில் நேற்று செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 சிக்ஸர்கள் அடித்ததின் மூலமாக புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம்
தற்போது டி20 கிரிக்கெட் உலகெங்கும் கிரிக்கெட் செல்லாத நாடுகளுக்கும் கிரிக்கெட் சுமந்து சென்று கொண்டிருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் வெற்றி உலகில் எல்லா இடங்களிலும் டி20 லீக் நடைபெற அமைந்திருக்கிறது. இப்படி நடைபெறும் டி20 லீக்குகளில் வெஸ்ட் இண்டீசில் இருந்து நிக்கோலஸ் பூரனுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. சிக்ஸர்களாக அடித்து நொறுக்கும் இவரது திறமை காரணமாக அணிகள் கோடிகளை கொட்டி கொடுக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் சத்தம் இல்லாமல் பெரிய அளவில் ஆபத்தான பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார். இவர் பங்கேற்கும் ஒரு டி20 தொடரில் மறக்க முடியாத மூன்று பெரிய இன்னிங்ஸ்களையாவது விளையாடி விடுகிறார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் இதே போல் இவரது ஆதிக்கம் தொடர்கிறது.
ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்
நேற்று கரீபியன் பிரீமியர் லீக்கில் செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிராக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 43 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 97 ரன்கள் குவித்தார். 250 ரன்கள் குவித்த இவரது அணி, 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
இதையும் படிங்க : ஆஸிகிட்ட இந்தப் பிரச்சனை இருக்கு.. அதனால இந்தியா இப்படித்தான் டெஸ்ட் தொடரை வெல்லும் – சுனில் கவாஸ்கர் கணிப்பு
இந்த போட்டியில் 9 சிக்ஸர்கள் அடித்ததின் மூலமாக ஒரு வருடத்தில் டி20 லீக் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2015ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 135 சிக்ஸர்கள் அடித்து படைத்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார். தற்பொழுது இந்த கிரிக்கெட் காலண்டர் ஆண்டில் மட்டும் நிக்கோலஸ் பூரன் 139 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.