29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரன் ஓய்வு.. அழிவு பாதையில் கிரிக்கெட்

0
326

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன், தனது 29வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். எதிரணி பந்துவீச்சுக்கு அழிவு தரக்கூடிய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், அதிகாலையில் சமூக வலைதளப் பதிவு மூலம் தனது முடிவை வெளியிட்டார்.

பூரன் 61 டி20 போட்டியில் விளையாடி 1983 ரன்களும், 106 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2275 ரன்களும் விளாசி சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டிரினிடாட்டில் பிறந்த பூரன், மிகக் குறுகிய காலத்தில் வெஸ்ட் இண்டீஸின் முன்னணி ஸ்டார் வீரராக விளங்கினார்.

- Advertisement -

நாட்டுக்காக விளையாடியது பெருமை:

சமீபத்தில் ஐபிஎல் 2025 இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய பூரன் அதிக சிக்சர்கள் விளாசி விருதை பெற்றார். இது தனக்கு கடினமான முடிவாக இருந்ததாகவும், வெஸ்ட் இண்டீஸ் அணியை தலைமையேற்று வழிநடத்தியது தனக்கு பெருமையாக இருந்ததாகவும் கூறினார்.

இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “கிரிக்கெட் ரசிகர்களுக்கு, நிறைய யோசித்து, ஆலோசனை செய்த பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். நாம் விரும்பும் இந்த விளையாட்டு மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்காக விளையாட வாய்ப்பை வழங்கியுள்ளது.

- Advertisement -

மெரூன் உடையை அணிந்து, தேசிய கீதத்தின் போது நின்று, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் இறங்கும்போது என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். அதன் உண்மையான பொருளை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அணியை கேப்டனாக வழிநடத்தியது என் இதயத்தில் எப்போதும் பெருமையாக இருக்கும்,”

ரசிகர்களுக்கு நன்றி:

“உங்கள் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. கடினமான சூழலில் ரசிகர்களாகிய நீங்கள் என்னை வழிநடத்தினீர்கள், நல்ல தருணங்களை ஆரவாரத்துடன் கொண்டாடினீர்கள். என் குடும்பம், நண்பர்கள் மற்றும் அணி வீரர்களுக்கு, இந்த பயணத்தில் என்னுடன் உடன் இருந்ததற்கு நன்றி. உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் என்னை முன்னோக்கி கொண்டு சென்றது.”

இதையும் படிங்க: மோசமா இருந்த அதே தோனிதான்.. இந்தியாவே பெருமைப்படவும் செஞ்சாரு.. முன்னாள் கேப்டனுக்கு வழங்கிய கவுரவம் குறித்து ரவி சாஸ்திரி

“இந்த சர்வதேச அத்தியாயம் முடிவடைந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மீதான என் அன்பு ஒருபோதும் மங்காது. அணிக்கு வெற்றியும் வலிமையும் ju வாழ்த்துகிறேன்,” என்று அவர் கூறினார்.
பூரன் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்துக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடருக்கு தன்னை பரிசீலிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -